துர்காவுக்கு ஒரே சிரிப்பு.. கலங்கிய ஜெகத்ரட்சகன்.. "நலங்கில்" உனக்கென்ன வேலை.. துரைமுருகன் விடலையே
துரைமுருகன் பேசப் பேச ஜெகத்ரட்சகன் ஆனந்த கண்ணீர் வடித்தார்
சென்னை: திமுக மூத்த தலைவர் துரைமுருகன் பேசப் பேச, ஜெகத்ரட்சகன் கண்கலங்கியவாறே நின்று கொண்டிருந்தார்.. இந்த நெகிழ்ச்சி சம்பவம் ஜெகத்ரட்சகன் இல்ல திருமணத்தில் நடந்தது.
திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரும் அரக்கோணம் தொகுதி எம்பியுமான ஜெகத்ரட்சகன் இல்ல திருமண விழா இன்று சென்னையில் நடந்தது..
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஜெகத் ரட்சகன்.. தலைசிறந்த எழுத்தாளர்.. மிகச்சிறந்த பேச்சாளர்.. கடந்த வருடம், திமுக - காங்கிரஸ் இடையே தமிழகத்தில் கூட்டணி இழுபறியில் இருந்தபோது, புதுச்சேரியில் திமுக தனித்து போட்டியிட முடிவு செய்திருந்தது.

60%
அப்போது, ஜெகத் ரட்சகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவும் யோசித்து வந்தது.. இதற்கு காரணம், புதுச்சேரியில் வன்னியர் வாக்குகள் 60 சதவீதத்துக்கு மேல் உள்ளதாலும், கட்சியில் சீனியர் என்பதாலும், அவரை வேட்பாளராக நிறுத்தும் முயற்சியில் திமுக இறங்கியதாக சொல்லப்பட்டது.. அந்த அளவுக்கு கட்சிக்குள் முக்கியத்துவம் வாய்ந்தவராக ஜெகத்ரட்சகன் உள்ளார்.. இந்நிலையில், அவரது இல்ல திருமண விழா இன்று சென்னையில் நடந்தது.. இதில் முதல்வர் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் கடலூர் மாவட்டங்களில் மழை பாதிப்புகளை பார்வையிட சென்றுவிட நேர்ந்தது..

ஜெகத்ரட்சகன்
அதனால், திருமணத்துக்கு முதல்நாளே, ஜெகத் வீட்டுக்கு சென்று முதல்வர் மணமக்களை வாழ்த்திவிட்டு சென்றார்.. இன்றைய தினம், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்... இந்த மணவிழாவில் மூத்த தலைவர் துரைமுருகன் கலந்து கொண்டு உரையாற்றினார்.. மணமக்களை வாழ்த்தி பேசிய துரைமுருகன், ஜெகத்ரட்சகனையும், அவரது மைத்துனர் காமராஜையும் மனமார வாழ்த்தி பெருமைபட பேசினார்.. அப்போது துரைமுருகன் பேசியதாவது:

திருமாங்கல்யம்
"முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைத்திருக்க வேண்டிய திருமணம்.. ஆனால், நேற்றே மணமக்களை வாழ்த்திவிட்டு, தன்னுடைய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.. ஆனாலும் அவரது துணைவியார் அவர்கள் இங்கே திருமாங்கல்யத்தை எடுத்து தந்துள்ளார்.. அவர் கைராசிக்காரர்.. அவர் போகாத கோயில் இல்லை, வணங்காத தெய்வமில்லை.. அந்த சக்தியெல்லாம் அந்த திருமாங்கல்யத்தில் கலந்துள்ளது.. ஜெகத்ரட்சகனும், காமராஜும் வேறு வேறல்ல.. ஜெகத்ரட்சகனால் உருவாக்கப்பட்டிருக்கிற உருவம்தான் காமராஜ்.

ஆலமரம்
இந்த குடும்பம் ஒரு கூட்டுக்குடும்பம்.. வழுதாவூரில் இருந்து சென்னைக்கு காமராஜருடைய தாயார், ஜெகத்தை அழைத்து வந்து, படிக்க வைத்து, பட்டம் பெற வைத்து, எம்எல்ஏவாக்கி, எம்பியாக்கி, அமைச்சராக பார்த்து மகிழ்ந்தவர்.. அவர்மீது நம்முடைய ஜெகத்துக்கு அவ்வளவு பெரிய மரியாதை.. நேற்றைக்குகூட என்னிடம் சொன்னார், என் அக்கா இருந்திருந்தால் இந்த திருமணத்தை இன்னும் சிறப்பாக நடத்தியிருப்பார் என்றார்கள்.. ஜெகத்தை போல், சகோதரிகளை தாங்கக்கூடியவர்களை நான் பார்த்ததில்லை.. அவருடன் பிறந்த சகோதரிகள், அவருடைய குடும்பம், அத்தனை பேரையும் தாங்கி நிற்கும் ஆலமரம்தான் ஜெகத்.

அக்கா அக்கா
இந்த குடும்பத்தையெல்லாம் வாழ வைத்து கொண்டிருக்கிற ஒரு தெய்வமாக இருக்கக்கூடியவர் என்னுடைய நண்பர் ஜெகத்.. நானே அவரை கேலி செய்தேன்.. "நலங்கு" சடங்கில் உனக்கு என்ன வேலை, ஏன் போகிறாய்? என்று கேட்டேன்? என் அக்காவின் ஆத்மாவுக்காக நான் போவேன் என்றார்.. இந்த காமராஜின் அம்மா அவர்கள், அன்பே உருவானவர்கள்.. நான் எப்போது அவரை சந்திக்க போனாலும்சரி, என்னுடன் எத்தனை பேர் வருகிறார்கள் என்றெல்லாம் அவர் பார்க்க மாட்டார்.

கண்கலங்கிய ஜெகத்
உடனே, எல்லாருடைய பாக்கெட்டிலும் 10 ஆயிரம் ரூபாய் வைப்பார்கள்.. அந்த நல்ல குணத்தை காமராஜரும் இனி பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.. துரைமுருகன் பேச பேச, உதயநிதி ஸ்டாலின் உட்பட அனைவருமே ரசித்து கேட்டுக் கொண்டேஇருந்தனர்.. ஆனால், தன் அக்காவை பற்றி துரைமுருகன் நெகிழ்ந்து பேசும்போது, ஜெகத்ரட்சகன் கண்கலங்கியவாறே நின்றுகொண்டிருந்தார்..!!!
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications