மாமல்லபுரத்தில் திண்டாடிய சுவிட்சர்லாந்து ஹாக்கி வீரர்கள்.. பரிந்துரை கடிதம் இல்லாததால் தவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாமல்லபுரத்தில் புராதன சின்னத்தை சுற்றி பார்க்க வந்த சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஹாக்கி வீரர்கள் 20 பேர் உள்பட 26 பேருக்கும் விளையாட்டு துறை அதிகாரிகள் பரிந்துரை கடிதம் வழங்காததால், சுமார் ஒரு மணி நேரமாக அங்கேயே காத்துக் கிடக்கும் சூழல் ஏற்பட்டது.

இதன் பின்னர் உடன் வந்த ஹாக்கி பயிற்சியாளர் சாதாரண வெளிநாட்டு பயணி போல, சென்று ரூ.15,600-க்கு டிக்கெட் எடுத்தனர். இந்த டிக்கெட்டை வாங்கிய பிறகு தான் மாமல்லபுரத்தின் புராதன சின்னங்களை சுவிட்சர்லாந்து ஹாக்கி வீரர்கள் சுற்றிப் பார்த்தனர்.

swiss-hockey-players-stranded-in-mamallapuram-after-failing-to-obtain-recommendation-letter

சுவிட்சர்லாந்து ஹாக்கி வீரர்கள்

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, அர்ஜென்டினா, சீனா, கனடா, ஸ்பெயின், நியூஸிலாந்து, பெல்ஜியம், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 24 நாடுகளை சேர்ந்த ஹாக்கி அணிகள் பங்கேற்றுள்ளன.

நவம்பர் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை 12 நாட்கள் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்க சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 20 ஹாக்கி வீரர்கள், ஒரு பயிற்சியாளர், பிசியோதெரப்பிஸ்ட், பொது மருத்துவர் என 26 பேர் சென்னை வந்துள்ளனர்.

அனுமதி கடிதம் வழங்கப்படவில்லை

இவர்களுக்கு நேற்று போட்டிகள் எதுவும் இல்லை. ஓய்வு நாள் என்பதால், நேற்று மாமல்லபுரத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் உலகளவில் புகழ்பெற்றவை என்பதால், அவற்றைக் காணும் ஆர்வத்துடன் வந்த சுவிட்சர்லாந்து வீரர்களுக்கு அங்கு போனதுமே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது, ஐந்துரதம் பகுதிக்கு வந்த சுவிட்சர்லாந்து ஹாக்கி வீரர்கள் உள்ளிட்ட 26 பேருக்கும் புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க விளையாட்டு துறை அதிகாரிகள் மாமல்லபுரம் தொல்லியல் துறைக்கு பரிந்துரைத்து அனுமதி கடிதம் வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. சுவிட்சர்லாந்து வீரர்களுடன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை.

1 மணி நேரமாக காத்து கிடந்தனர்

இதனால், உள்ளே செல்ல முடியாமல் சுவிட்சர்லாந்து ஹாக்கி வீரர்கள் 20 பேர் நுழைவு வாயில் பகுதியிலேயே ஒரு மணி நேரம் காத்திருந்தனர். என்ன செய்வது என்று சுவிட்சர்லாந்து வீரர்கள் குழம்பியபடி நின்று கொண்டிருந்தனர். இந்த நிலையில், அவர்களுடன் வந்த பயிற்சியாளர் ஒருவர் தொல்லியல் துறையின் நுழைவு சீட்டிற்கு சென்றார். அங்கு சக வெளிநாட்டு பயணி போல, ஒருவருக்கு 600 ரூபாய் என மொத்தம் ரூ.15,600 கட்டணம் செலுத்தி 26 பேருக்கும் நுழைவு டிக்கெட் எடுத்து வந்தார்.

ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல்

இதன் பிறகு இந்த டிக்கெட்டை காண்பித்த பின்னரே அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஒரு மணி நேரமாக மாமல்லபுரத்தில் காத்துக் கிடந்த ஹாக்கி வீரர்கள், டிக்கெட் பெற்று உள்ளே சென்றதும் அங்குள்ள புராதன சின்னங்களை கண்டு மெய்சிலிர்த்தனர். மாமல்லபுரம் ஐந்துரதம் மற்றும் வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட பல்லவர் கால புராதன சின்னங்களை சுற்றிப்பார்த்த அவர்கள், அங்கிருந்த கற்சிற்பங்கள் முன்பாக போட்டோக்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+