மொட்டைமாடிதான் இப்போ டிரெட் மில்.. சைலேந்திர பாபு ஐபிஎஸ் வெளியிட்ட சூப்பர் வீடியோ
சென்னை: கொரோனாவால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ள நிலையில் யாரும் உடற்பயிற்சி செய்ய முடியாமல் உள்ளார்கள்.இந்நிலையில் மொட்டைமாடிதான் இப்போ டிரெட் மில் . இளம் வெயிலில் ஓடினால் விட்டமின்-D கிடைக்கும், அது நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கும் என்று சைலேந்திர பாபு ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த மார்ச் 24ம் தேதி நள்ளிரவு தொடங்கி 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகள் தவிர எதற்காகவும் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகள் என்றாலும் அடிக்கடி வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். தினசரி காலையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள். தினசரி ஜிம்முக்கு (உடற்பயிற்சி கூடம்) போய் உடற்பயிற்சி மேற்கொள்பவர்களும் உடற்பயிற்சிகள் எதுவும் மேற்கொள்ள முடியாமல் வீட்டுக்குள்ளேயே கிடக்கிறார்கள்.
இதில் சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், முதியவர்கள், பெண்கள் என பலரும் தங்கள் உடல் நலத்தை பாதுக்காக்க கொஞ்சநேரமாது நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம் இப்போதைய சூழலில் உடற்பயிற்சியை மொட்டை மாடியிலேயே மேற்கொள்ளலாம் என்று காவல்துறை கூடுதல் டிஜிபி சைலேந்திபாபு ஐபிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியிட்டுள்ளார்.
மொட்டைமாடிதான் இப்போ டிரெட் மில் . இளம் வெயிலில் ஓடினால் விட்டமின்-D கிடைக்கும், அது நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கும். Terrace is the treadmill now. We can get a lot of vitamin- D, which give us immunity against disease. pic.twitter.com/aSbSxWsf1Z
— Sylendra Babu (@SylendraBabuIPS) April 9, 2020
அந்த வீடியோவில் அவர், மொட்டைமாடிதான் இப்போ டிரெட் மில் . இளம் வெயிலில் ஓடினால் விட்டமின்-D கிடைக்கும், அது நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கும். ஆரம்பத்தில் 10 நிமிடம் ஓடுஙகள், அடுத்து 30 நிமிடம் ஓடுங்கள், அடுத்த ஒரு மணி நேரம் கூட ஓடலாம். நாளை முதல் உடலை பிட்டாக வைத்துக்கொள்ள மொட்டை மாடியில் முயற்சி செய்து பாருங்கள் என்று கூறியுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications