"இந்த" 7 விஷயங்களையும் ஃபாலோ செய்ங்க.. தமிழக போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை!
சென்னை: தமிழக போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு 7 அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக, எவ்வித அசம்பாவித சம்பவங்கள் இன்றி முடிந்துள்ளது. இதற்காக தமிழக காவல்துறையினருக்கு பாராட்டுகள்.
அடுத்து காவல்துறையினர் தீவிரமாக செயல்படுத்த வேண்டிய கீழ்கண்ட பணிகள் உள்ளது.
1. வன்முறையாளர்கள், கூலிப்படையினர், கொலை குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை கோர்ட்டில் விரைந்து முடித்து, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்து சிறையில் அடைக்க வேண்டும்.
2. கண்டுபிடிக்கப்படாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும். திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட வேண்டும்.
3. தொடர்ந்து தவறு செய்யும் ரவுடிகளை மாவட்ட வருவாய் அதிகாரிகள் முன் ஆஜர்படுத்தி, நல்லொழுக்க பத்திரம் பெற வேண்டும். மீறுபவர்கள் ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.
4. குழந்தைகளுக்கு எதிரான குற்றம் புரிந்தவர்கள் அன்றாடம் கண்காணிக்கப்பட வேண்டும். அவர்கள் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தடுக்கப்பட வேண்டும்.
5. அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
6. வாகன விபத்துகளை குறைக்க செயல்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
7. குற்றவாளிகளின் புகைப்படங்கள், காணொலிகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். இவர்களை பிற்காலங்களில் அடையாளம் காண இது உதவியாக இருக்கும்.
இவ்வாறு டிஜிபி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications