பெரும் பஞ்சாயத்துகளுக்கு இடையே.. சங்கீத கலாநிதி விருதை பெற்றார் டி.எம்.கிருஷ்ணா!
சென்னை: கர்நாடக இசை என்பது வானத்திலிருந்து குதித்து வந்தது கிடையாது. மக்களுக்கானது அது.. எனவே மக்களுக்கு போய் சேர வேண்டும் என்று அனைத்து தரப்பினரிடையேயும் கர்நாடக இசையை கொண்டு சேர்த்த டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறது.
பஞ்சாயத்துகள்: ஒவ்வொரு ஆண்டும் சென்னை சங்கீத வித்வத் சபை (மியூசிக் அகாடமி) சார்பில், 'சங்கீத கலாநிதி' விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2024ம் ஆண்டுக்கான விருது குறித்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18ம் தேதி வித்வத் சபையின் செயற்குழு கூடி, டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியானதுதான் தாமதம், உடனே சில குறிப்பிட்ட கர்நாடக இசைக்கலைஞர்கள் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

எதிர்ப்புகள்: பிரபல பாடகிகளான நந்தினி, காயத்ரி சகோதரிகளின் எதிர்ப்புதான் பெரிய அளவில் விவாதங்களை கிளப்பியிருந்தது. இந்த அறிவிப்பு குறித்து தங்கள் x தளத்தில், “டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கப்பட்டால், இந்த ஆண்டு, நாங்கள் வித்வத் சபையில் பாடமாட்டோம்” என்று சகோதரிகள் கூறியிருந்தார்கள். ஏற்கெனவே சங்கீத கலாநிதி விருதை பெற்ற வீணை கலைஞர் ரவிகிரண், “கிருஷ்ணாவுக்கு விருது வழங்கினால், என்னுடைய விருதை திருப்பி கொடுத்துவிடுவேன்” என் கடிதம் எழுதியிருந்தார். இன்றும் சில கலைஞர்கள் ஒருபடி மேலே சென்று, “டி.எம்.கிருஷ்ணா ஸ்ட்ண்ட் செய்கிறார்” என்று கூட விமர்சித்திருந்தனர்.
உப்பு சப்பில்லாத காரணம்: உண்மையில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதை பெறும் அளவுக்கு ஞானம் இல்லையா? என்று கேட்டால் விமர்சகர்கள் மத்தியில் பதில் இல்லை. அதெப்படி கர்நாடக இசை மாமேதை செம்மங்குடி சீனிவாசரிடம் பாடம் பெற்ற கிருஷ்ணாவுக்கு, சங்கீத ஞானம் இல்லை என்று சொல்லிவிட முடியும்? எனவே இவர்களின் குற்றச்சாட்டுகள் அனைத்தும், கிருஷ்ணாவின் தகுதியை குறித்தே இருந்தது. கர்நாடக இசையின் புனிதத்தை கெடுக்கிறார், மரபை மீறுகிறார் என்பதுதான் இவர்களின் வாதம்.

கிருஷ்ணா என்ன செய்தார்?: இவர்கள் ஏன் இப்படி சொல்கிறார்கள் என்றால், கர்நாடக இசை காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கே சொந்தமானதாக கருத்தப்பட்டு வருகிறது. கர்நாடக இசையின் பாடு பொருள் என்ன? அதாவது இந்த இசை எதை மையமாக வைத்து பாடப்படுகிறது? பெரும்பாலும் இறைவனை வைத்து பாடப்படுகிறது. ஆனால் டி.எம்.கிருஷ்ணா, பெரியாரை வைத்து பாடினார். எண்ணூர் மக்களின் துயரத்தை பாடினார். கர்நாடக இசையில் இப்படியான பாடு பொருள்கள் இதற்கு முன்னர் இருந்தது கிடையாது.
இதற்காகத்தான் கிருஷ்ணாவுக்கு விருது கொடுக்க வேண்டாம் என்று குரல்கள் எழுந்தன. இந்த எதிர்ப்பு குரல்களுக்கு மற்றொரு முக்கிய காரணம் எம்.எஸ்.சுப்புலட்சுமி.
எம்.எஸ்.சுப்புலட்சுமி: அதாவது சென்னை சங்கீத வித்வத் சபை, கடந்த 2005 முதல் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் அமைந்த விருது ஒன்றையும், சங்கீத கலாநிதி விருதுடன் சேர்த்து வழங்கி வருகிறது. கிருஷ்ணா சமீபத்தில் எழுதிய கட்டுரை ஒன்றை வைத்துக்கொண்டு, அவர் எம்.எஸ்.சுப்புலட்சுமியை அவர் அவமதித்துவிட்டார் என்று சலசலப்புகள் எழுந்தன. இதனையடுத்து அவருக்கு விருது வழங்க கூடாது என்று நீதிமன்றத்தில் சுப்புலட்சுமியின் வாரிசு வழக்கு தொடுத்தார். ஆனால், நீதிமன்றம் விருது வழங்க தடையை விதிக்கவில்லை. ஆனால் மற்றொரு விஷயத்தை சுட்டிக்காட்டியது.
அதாவது 1997ல் சுப்புலட்சுமி எழுதிய அவருடைய உயிலில், தன் மறைவுக்கு பிறகு தன் பெயரில் அறக்கட்டளையோ, விருதையோ வழங்க கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். அப்படி இருக்கையில் ஏன் இந்த விருது வழங்கப்படுகிறது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆட்சேபனை இருந்தால் அவர் பெயரை பயன்படுத்தாமல் விருது வழங்கலாம் என்று கூறியிருந்தது.
சங்கீத கலாநிதி விருது: இப்படியாக நேற்று டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், ஜெருசேலம் ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், கல்வியாளருமான டேவிட் ஷுல்மேன் இந்த விருதை வழங்கியுள்ளார். இந்நிகழ்ச்சியில் பேசிய மியூசிக் அகாடமியின் தலைவரும், தி ஹிந்து குரூப் பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட் இயக்குநருமான என். முரளி, "கர்நாடக இசைக்கு வெளியே உள்ள, அதுவும் இளம் தலைமுறையினரை ஈர்க்கும் ஒரு கலைஞர் எனில் அது டி.எம்.கிருஷ்ணாதான்" என்று பெருமையுடன் கூறியுள்ளார்.
மரபும், புனிதமும் இசைக்கு கிடையாது. புனிதப்படுத்துதல் எல்லாம் வணங்குதலுக்கு உரியதாக மாறிவிடுகிறது. அப்படி மாறியது எதுவும் அனைத்து மக்களுக்கானதாக இருந்ததில்லை என்பது டி.எம்.கிருஷ்ணா மூலம் வரலாறு மீண்டும் நிரூபித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications