யார் வாழ்த்தினாலும், யாரை வாழ்த்தினாலும்.. "பர்த்டே கிப்ட்" கேக்கறதே டிஆர்பி ராஜாவுக்கு வேலை போல!
சென்னை: மன்னார்குடி சட்டசபை உறுப்பினர் டிஆர்பி ராஜாவின் பிறந்தநாளையொட்டி வாழ்த்து கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஒரு புதிய சப் ஸ்டேஷனை பிறந்தநாள் பரிசாக கேட்டுள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும் மெகா உணவு பூங்காவை கேட்டுள்ளார். அது போல் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய டிஆர்பி ராஜா மன்னார்குடிக்கு தடுப்பூசி தாருங்கள் என கேட்டிருந்தார்.
மன்னார்குடி எம்எல்ஏவாக இருப்பவர் டிஆர்பி ராஜா. இவர் அந்த தொகுதி வளர்ச்சிக்காக நிறைய கோரிக்கைகளை வைத்து வருகிறார். அந்த மாவட்ட மக்களின் செல்லப்பிள்ளையாகவே வலம் வருகிறார்.

பிறந்தநாள் வாழ்த்து
இவரிடம் இருக்கும் "கெட்ட பழக்கம்" தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினாலும், தான் யாருக்காவது வாழ்த்து கூறினாலும் அவர்களிடம் உடனே பரிசு கேட்பதுதான். இப்படித்தான் கடந்த ஜூலை 2 ஆம் தேதி சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியனின் பிறந்தநாள். அன்றைய தினம் அவருக்கு வாழ்த்து கூறிய டிஆர்பி ராஜா, மன்னார்குடி மக்களுக்கு தடுப்பூசி கொடுங்க அண்ணா என வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றினார்.

பிறந்தநாள்
அது போல் டிஆர்பி ராஜாவுக்கு ஜூலை 12 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஏராளமானோர் வாழ்த்து கூறினர். இவரும் கருணாநிதியுடன் இருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ந்தார். அப்போது அவருக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவும் செந்தில் பாலாஜியும் வாழ்த்து கூறினார்.

தங்கம் வாழ்த்து
தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், டிஆர்பி ராஜா ஆகியோர் கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறினார். உடனே தங்கம் தென்னரசுவிடம் அண்ணா What a blessed moment that was with #Thalaivar #Kalaignar Thank you thank you Birthday gifta #delta க்கு ஒரு #MegaFoodPark parcel பண்ணுங்கோ நன்னா இருப்பேள் என ட்வீட் போட்டிருந்தார்.

சப் ஸ்டேஷன்
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மின்சாரத்துறையில் பல புதிய முன்னேற்றங்களை கொண்டு வரவிருக்கும் மாண்புமிகு #அமைச்சர் அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி #முதலமைச்சர் அவர்களிடம் #மன்னார்குடி க்கான பல கோரிக்கைகளை எடுத்து வைத்துள்ளேன். மன்னைக்கு தேவையான புதிய Sub Station களை தாங்கள் விரைவில் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் டிஆர்பி ராஜா.

மதிவேந்தன் வாழ்த்து
அது போல் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் எம்எல்ஏ ராஜாவுக்கு வாழ்த்து கூறினார். உடனே அவரிடம் மாண்புமிகு #சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பிறந்தநாள் பரிசாக #மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட #நீடாமங்கலம் மூணாறு தலைப்பை #சுற்றுலா தலமாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோருகிறேன் என்றார். இது போல் தங்கள் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாசுக்காக தன் தொகுதிக்கான காரியத்தை சாதிப்பதில் குறியாக இருக்கிறார் இந்த டிஆர்பி ராஜா என மக்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவிக்கிறார்கள்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications