"கலர்" மாறிடுச்சே.. பறந்த "அசைன்மென்ட்".. ஆளுநரை விடாத டி.ஆர்.பாலு! திமுகவிற்கு பதிலடி ரெடியாகுதாமே
ஆளுநர் மாற்றக்கோரி திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது
சென்னை: ஆளுநர் ரவிக்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் வெடித்து வருகின்றன.. அதேபோல பாஜக பக்கமும் ஒருசில சத்தமில்லாத மூவ்கள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய ஆளுநர் போல, தற்போதைய ஆளுநர் ரவி இல்லை.. திமுக ஆட்சிக்கு வந்த நேரம்தான் இவரும் புதிதாக இங்கு பொறுப்பேற்றார்.
பதவியேற்றதில் இருந்தே ஒரே பரபரப்புதான்.. ஒருவேளை திமுகவுக்கு செக் வைப்பதற்காகவே, ஆளுநரின் நியமனம் நடந்ததாககூட விமர்சிக்கப்பட்டது.

கலர் - ஆளுநர்
எனினும், திமுக அரசு ஆளுநர் தரப்புடன் ஆரம்பத்தில் இருந்தே மென்மை போக்கைதான் கடைப்பிடித்து வந்தது.. நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில்தான் கருத்து மோதல்கள் அதிகமாகிவிட்டன. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, திருப்பி அனுப்பியது முதல், தமிழகத்தின் கவனத்தையும் ஆளுநர் ஈர்த்தபடியே வருகிறார்.. அதிலும் ஊட்டி ராஜ்பவனுக்கு "கலர்" மாற்றியதைகூட, மாநில அரசு பெரிதுபடுத்தவில்லை.. இன்று தமிழகத்தில் ராமராஜ்ஜியம் என்ற வார்த்தையை உச்சரிக்கும் அளவுக்கு ட்வீட்கள் பறந்து வருகின்றன..!

ராஜ்பவன்
இதற்கு நடுவில் அதிமுக தரப்பில் சில சீனியர்கள் அடிக்கடி ராஜ்பவனுக்குள் செல்வதும், திமுக அரசை பற்றி புகார் கூறுவதுமாக இருந்தனர்.. இதையும் ஆளுநர் ரவி கவனிக்க தவறவில்லை. நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரம் தொடர்பாக ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து, சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பிடிஆரும் சரி, முதல்வரும் சரி, தொடர்ந்து தங்கள் அதிருப்திகளை வெளிப்படுத்தி கொண்டே இருக்கிறார்கள்.. குறிப்பாக, 2 விதமான அணுகுமுறைகளை திமுக அரசு கையில் எடுத்தது..

கோரிக்கை
ஒருபக்கம் நீட் தேர்வில் விலக்கு கோரும் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து இங்கு முதல்வர் கோரிக்கை வைத்து கொண்டிருந்தபோது, மற்றொரு பக்கம் ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற விஷயத்தை டிஆர் பாலு கையில் எடுத்தார்.

சட்டவிரோதம்
"மசோதாக்களை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரம் குடியரசுத்தலைவருக்கு மட்டுமே இருக்கிறது.. அந்த அதிகாரத்தை இவர் எடுத்துக்கொண்டு திருப்பி அனுப்பியுள்ளார்... இது ஒரு மோசமான நடவடிக்கை... சட்ட விரோதம்.. ஆளுநர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மத்திய அரசு திரும்ப அழைக்க வேண்டும்" என்று டெல்லியில் மக்களவையில் முழக்கமிட்டார்..

கவன ஈர்ப்பு தீர்மானம்
அதுதான் இன்றும் சூடுபிடித்துள்ளது.. ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொண்டு வந்திருக்கிறது.. சில தினங்களுக்கு முன்பு, ஆளுநரின் அதிகாரத்தில் திருத்தம் செய்ய வலியுறுத்தி, தனி நபர் தீர்மானத்தை திமுக எம்பி வில்சன் தாக்கல் செய்திருந்த நிலையில், டிஆர் பாலு இன்று இப்படி ஒரு ஷாக்கை பாஜகவுக்கு தந்துள்ளார்.. ஆனால், பாஜகவோ, திமுகவுக்கு செக் வைக்கும் முயற்சியை கையில் எடுத்து வருவதாக தெரிகிறது..

பச்சை கலர்
குறிப்பாக, திமுக அமைச்சர்களின் ஊழல்கள், புகார்கள், குறித்து ரிப்போர்ட் அனுப்பும்படி மேலிடம் கேட்டுக் கொண்டதாகவும், அதன்படியே அசைன்மெண்ட்டை ராஜ்பவன் தரப்பு செய்து முடித்து விட்டதாகவும் சலசலக்கப்படுகிறது.. அநேகமாக குடியரசு தலைவர் தேர்தல் முடிந்தபிறகு, அடுத்த மூவ் குறித்து மேலிடம் எடுக்கும் என தெரிகிறது.. அதற்கேற்றவாறு, கடந்த 2 நாட்களாகவே ஜெயக்குமார் தந்து வரும் பேட்டிகள் பலவித சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது.

அசைன்மென்ட்
திமுகவின் ஊழல் லிஸ்ட் ரெடியாகிறது என்று ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார் ஜெயக்குமார்.. அதற்கேற்றபடி, டெல்லி தந்திருக்கும் அசைன்மென்ட் வேலையும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.. இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது ஆளுநர் மாற்றப்பட வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை எடுபடுமா? என தெரியவில்லை.. ஒருவேளை ஆளுநர் மாற்றப்பட்டால் அது திமுகவுக்கு பிளஸ் ஆக பார்க்கப்படும்.. அல்லது ஆளுநரின் அசைன்மென்ட்படி ஒர்க்அவுட் ஆனால் அது பாஜகவுக்கு பிளஸ் ஆக பார்க்கப்படும்.. என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications