பண்ண விரும்பவில்லை விமர்சனம்! நாட்டு மக்களுக்கு தேவை ஒரு விமோசனம்! விஜய் குறித்து டி.ராஜேந்தர் பஞ்ச்
சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து முன்னாள் எம்எல்ஏவும் இயக்குநருமான டி.ராஜேந்தர் தனக்கே உரிய ஸ்டைலில் வாழ்த்தியுள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை என கூறியுள்ளார். மேலும் அவரது கட்சியின் இலக்கு 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல்தான் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது ஒப்புக் கொண்ட படங்களில் நடித்து முடித்துவிட்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விஜய் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதற்கு நிறைய அரசியல் கட்சிகளும் சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் பிரபல இயக்குநரும் முன்னாள் எம்எல்ஏவுமான டி ராஜேந்தர் செய்தியாளர் கூறியிருப்பதாவது: விஜய்யின் அரசியல் வருகையை நானும் வரவேற்கிறேன். அரசியல் என்பது பொது வழி . இதில் யார் வேண்டுமானாலும் பயணிக்கலாம். அதில் எந்த தவறுமே இல்லை.
இந்த சூழலில் நான் விஜய்யின் அரசியல் நுழைவு குறித்து "பண்ண விரும்பவில்லை விமர்சனம், நாட்டு மக்களுக்கு எப்படியாவது வேண்டும் ஒரு விமோசனம்" என அவரது பாணியில் விஜய்யை டி.ராஜேந்தர் வாழ்த்தினார். கடந்த 2015ஆம் ஆண்டு விஜய்யின் புலி திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கூட டி.ராஜேந்தர் விஜய்யை புகழ்ந்து பேசினார்.
அவர் பேசுகையில் அமைந்தது நல்ல தலைவிதி அதனால் தான் நான் தமிழகத்தின் இளைய தளபதி என்று பெயர் எடுத்திருக்கும் இளைய தளபதியாய் இந்த ரசிக பட்டாளத்தின் அன்புக்குரிய அதிபதியாய் இருக்கக் கூடிய விஜய்யின் புலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் மாலை நேர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிம்புவுக்கு அண்ணன் மாதிரி இருப்பவர் விஜய் தான். இது தான் உண்மை. நண்பன் படத்தில் நடிச்சா மட்டும் போதாது. வாழ்க்கையில் நல்ல நண்பனாக இருக்கத் தெரியணும். விஜய்யிடம் உள்ளது நல்ல நட்பு, அவர்கள் பார்த்தது எல்லாம் நட்பு. உணவு நல்லா இருக்க வேண்டும் என்றால் அதற்கு தேவை உப்பு, உணர்வு நல்லா இருந்தால் தான் வரும் இந்த மாதிரி நட்பு.
பூவிடம் இருப்பது வாசம், வாசலிலேயே தெரிந்தது இந்த பூவின் வாசம், காரணம் இவர் நடிச்ச படம் பூவே உனக்காக, நான் வாசலில் வரவேற்றது பூவே உனக்காக, நான் இங்கு வந்தேன் உனக்காக. உன்னுடைய ரசிகர்கள் தரலாம் ஆயிரம் மரியாதை. ஆனால் எனக்கு உன்னிடத்தில் மரியாதை. காரணம் நீ நடித்த படம் காதலுக்கு மரியாதை.
காட்டில் இருக்கலாம் ஆயிரம் புலி ஆனால் இந்த புலி அட்மைர் பண்ற புலி, அட்டாக் பண்ற புலி, அட்டகாசமான புலி, அசத்தலான புலி, அசுர புலி, அசரா புலி, அற்புத புலி, அபூர்வ புலி என்று டி ராஜேந்தர் விஜய்யை புகழ்ந்திருந்தார். இது பல மீம்ஸ்கள் உருவாக காரணமாகவும் இருந்தன.
-
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்!












Click it and Unblock the Notifications