அமைதி காக்க வேண்டும் "வாய்மூடி".. லட்சிய திமுக ஆதரவு யாருக்கும் இல்லை- டி.ராஜேந்தர் அதிரடி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: லட்சிய திமுக இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று அந்த கட்சி தலைவர், டி.ஆர்.ராஜேந்தர் அறிவித்துள்ளார்.
நாடும், மக்களும் நல்லா இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    தேர்தலில் யாரையும் ஆதரிக்கவும் இல்லை... அரவணைக்கவும் இல்லை... டி.ஆர் பகீர் அறிவிப்பு!

    அடுக்கு மொழியில் பேசி அரசியல் களத்தை சூடாக்கி வந்தவர் டி.ஆர். ஆனால் இப்போதெல்லாம் அடுக்குமொழிக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில்தான், இந்த தேர்தலில் ராஜேந்தரை எந்த பெரிய கட்சியும் கண்டுகொள்ளவில்லை. அவர் எந்த கட்சிக்கு ஆதரவு தரப்போகிறாரோ என்று பெரும் "எதிர்பார்ப்பு" இருந்தது.

    இந்த நிலையில், தனக்கே உரித்தான அடுக்குமொழி பாணியில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் டி.ராஜேந்திரன்.

    ஓபிஎஸ்சுடன் சந்திப்பு

    ஓபிஎஸ்சுடன் சந்திப்பு

    மறைந்த முன்னாள் முதல்வர், அம்மா காலத்திலிருந்து தொடங்கி இந்நாள் துணை முதல்வர், அண்ணா தி.முக.வின் ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு திரு.ஓ.பி.எஸ். அய்யா அவர்கள் என் நீண்ட நாள் நண்பர் ஆவார். நடைபெறும் இந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்
    தொடங்குவதற்கு முன்பு மாண்புமிகு ஒ.பி.எஸ் அய்யா அவர்கள் என்னை அழைத்தார், சென்றேன். மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
    கையில் பூங்கொத்து ஒன்றை தந்தேன் கண்ணியமாய் விடைபெற்று வந்தேன்.

    பல பலம் இருக்கு

    பல பலம் இருக்கு

    மறைந்த முதல்வர் அம்மா அவர்கள் இல்லாமல் அண்ணா தி.மு.க. சந்திக்கின்ற முதல் சட்டமன்ற தேர்தல் களம் அதைப்போல் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் இல்லாமல் தி.மு.க சந்திக்கின்ற முதல் சட்டமன்ற தேர்தல் களம். இரண்டு கட்சிகளுக்குமே இருக்கிறது அவரவர் பலம். இதைத்தவிர கூட்டணியென்று சேர்த்திருக்கிறார்கள் பக்க பலம் அதைத் தவிர அவர்களிடத்தில் இருக்கிறது பல பலம்.

    நான் என்ன செய்யப் போகிறேன்

    நான் என்ன செய்யப் போகிறேன்

    இரண்டு கட்சிகளுமே பார்த்துக் கொள்ளப்போகிறது பலப்பரிட்சை. இதில் நான் போய் என்ன செய்யப் போகிறேன் புது சிகிச்சை. ஒருவருடைய வாக்கு வன்மை, அவர் வார்த்தையில் இருக்கும் தன்மை, அதில் வெளிப்படும் உண்மை. அதற்கு ஒரு சக்தி இருக்கிறது என்று சில முன்னாள் முதல்வர்கள் நம்பினார்கள். அதன் அடிப்படையில் என்னை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்தார்கள். அது ஒரு காலம்.

    கொடுக்க வேண்டியதை கொடுத்து

    கொடுக்க வேண்டியதை கொடுத்து

    கொள்கையை சொல்லி ஓட்டு கேட்டதெல்லாம் அந்தக் காலம். கொடுக்க வேண்டியதை கொடுத்து ஓட்டு வாங்கிக் கொள்ளலாம் என்பது இந்தக் காலம். காலமும் சரியில்லை, களமும் சரியில்லை. கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம் என்று முடிவெடுத்து விட்டேன். பத்தும் பத்தாததற்கு இது கொரோனா காலம்.

    வாய்மூடி

    வாய்மூடி

    பாதுகாப்பு வேண்டுமென்றால் அணிந்து கொள்ள வேண்டும் முகமூடி. பக்குவப்பட்டவனாய் வாழ வேண்டுமென்றால் அமைதி காக்க வேண்டும் வாய்மூடி. இந்த சட்டமன்ற தேர்தலில் எங்கள் இலட்சிய தி.மு.க நாங்கள் யாரையும் ஆதரிக்கவும் இல்லை, அரவணைக்கவும் இல்லை. நடுநிலைமையோடு இருக்க விரும்புகிறோம். நாடும், நாட்டு மக்களும் நல்லா இருக்க வேண்டுமென்று பிரார்த்திக்கிறோம். எல்லாம் வல்ல இறைவனிடம். இப்படிக்கு, டிஆர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+