இப்போ இருக்கும் தமிழக பாஜக தலைவர்கள் நீடித்தால் தமிழகத்தில் தாமரை எப்படி மலரும்? டி ராஜேந்தர் கேள்வி
சென்னை: பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி எதையும் செய்யவில்லை என லட்சிய திமுக தலைவர் டி ராஜேந்தர் கூறியுள்ளார்.
அண்ணா நினைவு தினத்தையொட்டி சென்னையில் திநகரில் அவரது திருவுருவ படத்திற்கு டி ராஜேந்தர் மலர்த் தூவி மரியாதை செய்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் உள்ள பாமரனை கூட கட்சியில் இணைத்தவர் அறிஞர் அண்ணா. இதுவரை அண்ணா தொடங்கிய திராவிட கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தான் மாறி மாறி தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது.

கட்சி
மக்களவைத் தேர்தல் வரை என்ன செய்ய வேண்டும் என சொல்கிறேன். அதுவரை கட்சியில் உழைத்து வாருங்கள் என தனது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார். எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகிய 4 பேரும் அதிமுகவை அழித்துவிட்டார்கள். ஈழத் தமிழர்களை வஞ்சித்த காங்கிரஸ் கட்சியோடு திமுக கூட்டணி வைக்கும் வகை திமுகவுடன் நாம் கூட்டணி வைக்க முடியாது.

காங்கிரஸ்
கருணாநிதியை முதல்வராக விடாமல் தடுத்தவர்கள் எல்லாம் திமுக கூட்டணியில் உள்ளனர். காங்கிரஸ் கட்சி முதலில் தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்தியாவை பற்றி சிந்திக்கலாம். பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி எதுவுமே செய்யவில்லை.

டி ராஜேந்தர்
உள்ளாட்சி தேர்தலில் லட்சிய திமுக போட்டியிடவில்லை. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஈழத் தமிழர்கள் வாழ முடியாமல் தவிக்கின்றனர். உணவுக்கும் குடிநீருக்கும் பிரச்சினையாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஈழத் தமிழர்கள் மற்றும் இலங்கை மக்களை காப்பாற்ற வேண்டும் என தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் கோரிக்கை வைத்தார் டி ராஜேந்தர்.

பாஜக தலைவர்கள்
தமிழக பாஜகவில் உள்ள தலைவர்கள் தொடர்ந்து அந்த கட்சியில் நீடித்தால் தமிழகத்தில் தாமரை மலரவே மலராது. தற்போது உள்ளாட்சி தேர்தல் என்பதால் கொரோனா போய்விட்டதா என தமிழக அரசுக்கு டி ராஜேந்தர் கேள்வி எழுப்பினார். மேலும் கட்சியின் கட்டமைப்பு சரியாக இல்லாததால் கட்டமைப்பை வலுப்படுத்தி கொண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளேன் என டி ராஜேந்தர் தெரிவித்தார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications