Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலீல் அஹ்மத், அவேஷ் கான் சாதித்தது என்ன? நடராஜன் ஏன் இல்லை? சுமந்த் சி ராமன் சந்தேகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டி20 உலகக் கோப்பை தொடரில் நடராஜனை ஏன் தேர்வு செய்யவில்லை என்று சுமந்த் சி ராமன் அடுக்கடுக்கான சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

t20 world cup 2024 india squad Why Natarajan Missing Explained by Sumant C Raman

பி.சி.சி.ஐ. அறிவித்துள்ள 15 பேர் கொண்ட இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர் மத்தியில் இந்த உற்சாகமான அறிவுப்பு, தமிழ்நாட்டைப் பொறுத்தவரைச் சோகமானதாக மாறியுள்ளது.

காரணம், நடராஜன் அணியில் சேர்க்கப்படவில்லை. ஆகவே கிரிக்கெட் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் வீரர்கள் தேர்வை விமர்சித்து கருத்திட்டு வருகின்றனர். நடிகர் சரத்குமார் கூட நடராஜனைச் சேர்ப்பதற்கு ஆலோசனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

t20 world cup 2024 india squad Why Natarajan Missing Explained by Sumant C Raman

வீரர்களின் இந்தத் தேர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளதாக சுமந்த் சி ராமன் கூறியுள்ளார். நடராஜன் சேர்க்கப்படாதது என்ன காரணம் என்றும் அவர் காட்டமாகக் கேள்வி எழுப்பி உள்ளார்.

அணி வீரர்களின் தேர்வு குறித்து சுமந்த் சி ராமன் பேசுகையில், "இந்தப் பட்டியலில் தேர்வாகி உள்ள சில வீரர்களின் தேர்வு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதைப்போலச் சிலர் விடுபட்டுள்ளனர். அதில் குறிப்பாக இருவர். ஒருவர், ரிங்கு சிங். மற்றொருவர், நடராஜன்.

இதில் நடராஜன் அணியில் முக்கிய வீரர்கள் பட்டியலில் இல்லை என்றாலும் ஸ்டேண்ட் பை லீஸ்டில் இருப்பார் என நினைத்திருந்தேன்.

t20 world cup 2024 india squad Why Natarajan Missing Explained by Sumant C Raman

அவேஷ் கானை தேர்வு செய்யும்போது ஏன் நடராஜனைத் தேர்வு செய்யக் கூடாது? அதற்கான காரணம் என்ன என்றே எனக்கு உண்மையாகவே புரியவில்லை. அதற்காக ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக நடராஜன் வருவார் என்று நான் சொல்ல வரவில்லை.

அதைப்போலத்தான் ரிங்கு சிங்.

அப்படிப் பார்த்தால் ஹர்திக் பாண்ட்யா இந்த ஐபிஎல் தொடரில் பெரியதாக என்ன செய்துவிட்டார்? ஒரு காலத்தில் அவர் சாதித்திருக்கிறார் என்பதற்காகப் பட்டியலில் அவரைச் சேர்க்கிறார்கள். அதுவும் அணியின் வைஸ் கேப்டன் ஆக அவரைப் போட்டுள்ளார்கள்.

இரண்டாவது ஸ்டேண்ட் பை லிஸ்டில் சுப்மன் கில் இருக்கிறார். இந்த ஐபிஎல் போட்டிக்குச் சரியான தேர்வு என்று பார்த்தால் ருதுராஜ் கெய்க்வாட்தான் சரியாகத் தேர்வாக இருப்பார். அப்படிப் பார்த்தால் பட்டியலில் சுப்மன் கில் இருக்கிறார் ஏன் கெய்க்வாட் சேர்க்கப்படவில்லை ?

இப்படிப் பல கேள்விகள் உருவாகின்றன.

t20 world cup 2024 india squad Why Natarajan Missing Explained by Sumant C Raman

அணியில் பயமறியாத இளைஞர்கள் என்று குழு ஒன்று உருவாகியுள்ளது. அதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருக்கிறார். ரிங்கு சிங் இருக்கிறார். இவர்கள்தான் அடுத்த தலைமுறையினர்.

சொல்லப் போனால் ரோஹித் சர்மா, விராட் கோலி எல்லாம் மிகச் சிறப்பான வீரர்கள். அதில் மாற்றுக்கருத்தே கிடையாது. ஆனால் இன்றைய டி20 வீரர்களில் இவர்கள்தான் சிறப்பானவர்களா? இதுதான் மிக முக்கியமான கேள்வி.

ஃபினிஷராக ஜடேஜாவும் ஹர்திக் பாண்ட்யாவும்தான் போகிறார்கள். வேறு யாரும் அணி இல்லை. போட்டியின் போது 16 ஆவது ஓவரில் உள்ளே வந்து அசாத்தியமாக 40 ரன்களை அடிப்பதற்கு வேறு ஆட்கள் இல்லை. அங்குதான் நாம் சிந்திக்க வேண்டி உள்ளது.

அணியில் ஜடேஜாவை எடுத்துள்ளார்கள். அக்சார் பட்டேலை என்ன செய்யப் போகிறார்? ஸ்பின் டிபார்ட்மெண்ட்டை பொறுத்தவரை எந்தப் பற்றாக்குறையும் இல்லை.

t20 world cup 2024 india squad Why Natarajan Missing Explained by Sumant C Raman

அடுத்து பேட்டிங் என்று எடுத்துக் கொண்டால், ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால். அதற்குப் பிறகு விராட் கோலி. நம்பர் 4இல் யார் ஆடப் போகிறார்கள்? சஞ்சு சாம்சனா? ரிஷப் பந்த்தா? ஷிவம் துபேவா? சூரியகுமார் யாதவா? யார் ஆடப் போகிறார்கள்? யார் 4? யார் 5? யார் 6?
ஒருவேளை 4க்கில் சூரியகுமார் யாதவ்தான் ஆடுவார் என்று எடுத்துக் கொண்டால்? அப்போது 5 அல்லது 6இல் துபே ஆடுவாரா? ஆட மாட்டாரா? இப்படிப் பல கேள்விகள் உள்ளன.

அதற்காக அணி மோசமாக உள்ளது என்று சொல்ல மாட்டேன். அதில் உள்ள 11 வீரர்கள் இயல்பான தேர்வுதான். அது சந்தேகமே இல்லை. அதைத்தாண்டித் தேர்வாகியுள்ள சிலர் மீது கேள்விகள் எழுகின்றன.

ஸ்டேண்ட் பையில் போடும் அளவுக்கு கலீல் அஹ்மத் ஏதாவது செய்துள்ளாரா? கலீல் அஹ்மத்தையும் அவேஷ் கானையும் தேர்வு செய்துள்ள போது, ஏன் நடராஜனைத் தேர்வு செய்யவில்லை?

பும்ராவுக்கும் சிராஜுக்கும் பதிலாக நடராஜை போட வேண்டும் என்று நான் சொல்லவில்லை? இந்த இருவரை விட நடராஜன் என்ன குறைந்து போய்விட்டார் என்று கேட்கிறேன்" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+