என்ன ஆச்சு?.. பாதி போட்டியில் மைதானத்தை விட்டு வெளியேறிய முக்கிய இந்திய வீரர்.. சிக்கல் மேல் சிக்கல்
சென்னை: இந்திய அணியில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நேற்று காயம் காரணமாக பாதி ஆட்டத்திலேயே வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை டி 20 ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. முதல்முறை உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தி உள்ளது. நேற்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.
நேற்று இந்தியாவின் பவுலிங், பேட்டிங் இரண்டுமே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வெறும் 175 ஓவரிலேயே 152 ரன்கள் எடுத்து வென்றது. இந்திய அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித், சூர்யா குமார் யாதவ், பாண்டியா, ராகுல் உள்ளிட்ட பல முக்கிய வீரர்கள் சரியாக ஆடவில்லை.

ஆல் ரவுண்டர்
இந்திய அணியில் ஆல் ரவுண்டர் என்ற பெயரில் எடுக்கப்பட்டவர்தான் ஹர்திக் பாண்டியா. பேட்டிங் ஆடுவார்.. பாஸ்ட் பவுலிங்கும் போடுவார் என்பதால் அணியில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு வருடமாக இவர் பவுலிங் செய்வது கிடையாது. இவரின் காலில் செய்யப்பட்ட ஆபரேஷனுக்கு பின் பவுலிங் செய்வதே இல்லை. இரண்டு வருடத்தில் அதிகபட்சம் 10 ஓவர்கள் கூட இவர் வீசி இருக்க மாட்டார்.

ஹர்திக் பாண்டியா
இந்த நிலையில்தான் நேற்று இவரை முழு நேர பேட்ஸ்மேனாக இந்தியா களமிறக்கியது. இவர் போக புவனேஷ்வர் குமார், ஷமி, பும்ரா, வருண், ஜடேஜா என்று 5 பவுலர்கள் இருந்தனர். முழு நேர பேட்ஸ்மேன் இஷான் இருக்கும் போது பாண்டியாவிற்கு தேவையின்றி வாய்ப்பு வழங்கப்பட்டது. நேற்று பவுலிங் செய்யாத பாண்டியா பேட்டிங்கிலும் சொதப்பினார்.

பேட்டிங்கிலும் சொதப்பினார்
நேற்று 8 பந்துகள் பிடித்த ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி உட்பட 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். முக்கியமான நேரத்தில் டெத் ஓவர்களில் சரியாக ஆட முடியாமல் திணறினார். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா அவுட் ஆவதற்கு முன் பவுன்சர் பந்து ஒன்றை தோள்பட்டையில் வாங்கி காயம் அடைந்தார். இதில் அவர் வலியில் துடித்தார்.

திணறினார்
தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் கையை பிடித்துக்கொண்டு திணறினார். இந்த நிலையில்தான்தான் முதல் இன்னிங்ஸ் முடிந்த பின் அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்கு பதிலாக இஷான் கிஷான் பீல்டிங் செய்தார். தொடர்ந்து வலியில் கஷ்டப்பட்ட காரணத்தால் ஹர்திக் பாண்டியா உடனே ஸ்கேன் எடுக்க அழைத்து செல்லப்பட்டார்.

பிட்னஸ்
இவரின் தோளில் ஏற்பட்ட காயம் தற்போது ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. இதன் ரிப்போர்ட் இன்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக இவர் அடுத்த போட்டியில் ஆடுவது சிக்கலாகி உள்ளது. இவர் ஆடும் பிட்னஸில் இருப்பாரா என்பது சந்தேகம் ஆகி உள்ளது.

இஷான் வாய்ப்பு
ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துள்ள நிலையில் இன்னொரு சிக்கலாக பாண்டியாவின் காயம் குறித்த செய்தி வந்துள்ளது. அடுத்த போட்டியில் இதனால் பாண்டியாவிற்கு பதிலாக இஷான் கிஷான் ஆட அதிக வாய்ப்புகள் உள்ளன.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications