அடுத்த மேட்ச் முக்கியம்.. மூத்த வீரருக்கு மொத்தமாக டாட்டா காட்டும் இந்தியா?.. அணிக்குள் ட்விஸ்ட்?
சென்னை: இந்திய அணிக்குள் அடுத்த டி 20 உலகக் கோப்பை ஆட்டத்தில் மிக முக்கியமான மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை டி 20 ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. மிக மோசமான பேட்டிங் மற்றும் பவுலிங் காரணமாக இந்தியா தோல்வி அடைந்துள்ளது.
இந்த நிலையில்தான் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த இந்தியா நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

நியூசிலாந்து
நியூசிலாந்துக்கு எதிராக தோல்வி அடையும் பட்சத்தில் இந்திய அணியின் செமி பைனல் வாய்ப்பு பெரிய அளவில் பாதிக்கப்படும். இந்தியாவின் அடுத்த லீக் ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ளது. அடுத்த ஆட்டம் முக்கியமானது என்பதால் இந்திய அணிக்குள் சில மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா
அதன்படி இந்திய அணியில் தற்போது ஹர்திக் பாண்டியா மட்டுமே சிக்கலாக இருக்கிறார். ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்வது இல்லை. கடந்த போட்டியில் அவர் ப்யூர் பேட்ஸ்மேனாக களமிறங்கினார். ஆனால் பேட்டிங்கிலும் 8 பந்தில் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதோடு கடந்த போட்டியின் போது இவருக்கு கையில் காயமும் பட்டது.

காயம்
இவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்ட நிலையில் ஹர்திக் பாண்டியா தற்போது முழு உடல் தகுதியோடு இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்த போட்டியில் இவர் கண்டிப்பாக ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஆடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை காரணம் காட்டி ஹர்திக் பாண்டியா ஓரம் கட்டப்பட வாய்ப்பும் உள்ளது.

ஹர்திக் பாண்டியா சரியாக ஆடவில்லை
ஏனென்றால் ஐபிஎல் தொடரிலும் சரி, பயிற்சி ஆட்டத்திலும் சரி. ஹர்திக் பாண்டியா சரியாக ஆடவில்லை. இதனால் அவருக்கு பதிலாக அணிக்குள் இஷான் கிஷான் போன்ற ப்யூர் பேட்ஸ்மேனை கொண்டு வரும் முடிவில் இந்திய அணி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியாவை ப்யூர் பேட்ஸ்மேனாக இறக்குவதற்கு பதில் இஷான் கிஷானை இறக்க முடியும்.

மாற்றம்
இன்னொரு பக்கம் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் சூர்யா குமார் யாதவ் 3வது வீரராக களமிறங்க வாய்ப்பும் உள்ளது. அவர் மூன்றாவது இடத்தில் இன்னும் சிறப்பாக ஆடுவார் என்பதால் கோலிக்கு முன்பாக பேட்டிங் இறங்க வாய்ப்புள்ளது. மற்றபடி பவுலிங்கில் பெரிய மாற்றம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

வாய்ப்பு
நியூசிலாந்துக்கு எதிராக அடுத்த ஆட்டத்தில் இந்திய அணியில் ரோஹித், ராகுல்,சூர்யா குமார், கோலி, இஷான், பண்ட், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஷமி, பும்ரா, வருண் ஆகியோர் களமிறங்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. .
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications