டாக்ஸிக் படத்தை சொல்கிறாரா டாப்ஸி?.. அப்படியே போட்டு உடைச்சிட்டாரே.. வைரலாகும் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாக்ஸிக் படம் படுமோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.. இதுவரை எந்த பாசிட்டிவ் விமர்சனத்தை எந்த மீடியாவுமே டாக்ஸிக் படத்துக்கு தரவில்லை.. அந்தளவுக்கு கேலி கிண்டலுக்கு ஆளாகி வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், பிரபல நடிகை டாப்ஸி, நேர்காணல் ஒன்றில் ஒரு துணிச்சலான கருத்தை தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் டாப்ஸி.. இதனாலேயே அவர் முன்னணி நடிகையாகவும் பாலிவுட்டில் வலம் வருகிறார்.. இவர் சமீபத்தில் தந்துள்ள பேட்டிதான் இப்போது இந்திய சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

Taapsee

டாக்ஸிக் படம்

டாக்ஸிக் படத்தை பற்றிதான் டாப்ஸி பேசியிருக்கிறார்.. இயக்குனர் கீது மோகன் தாஸ் டைரக்‌ஷனில், நடிகர் யஷ் நடிப்பில் உருவான டாக்ஸிக் படம் கடந்த 26ம் தேதி வெளியானது.

இதில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் அதிகளவில் கிளாமர் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் படம் ரிலீஸான நாளிலிருந்தே கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.. நெட்டிசன்கள் மிக மோசனமாக கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.

டாக்ஸிக் படம் பற்றி டாப்ஸி?

இந்நிலையில், டாப்ஸி ஒரு பேட்டியில் பேசும்போது, "சமீபத்திய மாதங்களில் வெளியான சில திரைப்படங்களை என் குடும்பத்தினருடன் பார்த்து கொண்டிருக்கும்போது, நான் சினிமாவில் இருந்து ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டதா என்று யோசித்தேன். இப்போது எடுக்கப்படும் இந்த வகையான படங்களில் நடிக்க எனக்கு துளியும் விருப்பமில்லை.

எனது சினிமா பயணம், காலத்தை கடந்து நிற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.. 10 வருடங்கள் கழித்து பார்க்கும்போது எனது தேர்வுகள் எனக்கே தர்மசங்கடத்தை ஏற்படுத்த கூடாது. இப்போது உருவாக்கப்படும் இந்த வகையிலான படங்கள் மட்டுமே எடுக்கப்படும் சூழல் நிலவியிருந்தால், என்னை போன்ற ஒருவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருக்காது. ஒரு நடிகையாக, தற்போது உருவாக்கப்படும் இது போன்ற ப்டங்களில் ஒரு பகுதியாக இருக்க தான் விரும்பவில்லை..

கமர்ஷியல் படங்களுக்காக இப்படியா

இப்போதுள்ள சூழலில் கமர்ஷியல் வெற்றியை மட்டுமே முதன்மையாகக் கொண்டு படங்கள் உருவாக்கப்படுகின்றன.. இப்படியிருக்கும்போது, என்னை போன்ற நடிகைகளால் நிலைக்க முடியுமா என்பது சந்தேகம்தான்..

வெறும் புகழுக்காகவும், பணத்துக்காகவும், என்னுடைய தனிப்பட்ட கொள்கைகளுக்கும் மதிப்புக்கும் பொருந்தாத படங்களில் இனி நடிக்கப் போவதில்லை என்பதில் நான் தெளிவாக உள்ளேன்.. என் சுயமரியாதையை பாதிக்காத வகையில் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கவே விரும்புகிறேன்.. ஏனென்றால்,
வருங்காலத்திலும் பொதுமக்கள் என்னுடைய படங்களை பார்க்கும்போது, தவறான தேர்வுகள் செய்ததாக உணரும் சூழல் வரக்கூடாது.. அதனால் கவனமாக இருக்கிறேன்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

டாப்ஸி யாரை சொல்கிறார்

டாப்ஸியின் இந்த பேட்டிதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. ஆனால், டாப்ஸி எந்த படத்தின் பெயரையோ, எந்த நடிகை, நடிகரின் பெயரையோ வெளிப்படையாக சொல்லவில்லை.. இருந்தாலும், சோஷியல மீடியாவில் பலரும், டாக்ஸிக் படத்தை பற்றிதான் டாப்ஸி சொல்கிறார் என்று தொடர்புபடுத்திப் பேசி வருகின்றனர்.

டாப்ஸியின் இந்த தைரியமான கருத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.. அதேசமயம் டாப்ஸி கடந்த காலங்களில் சில கமர்ஷியல படங்களில் நடித்துள்ளதை சுட்டிக்காட்டியும் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+