அன்று இங்க் தெளிப்போம்..இன்று மேஜை உடைக்கிறார்கள்.. தருமபுரி மாணவர்கள் சஸ்பெண்ட்..அன்பில் மகேஷ்
மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை: தேர்வு முடிந்ததும் இங்க் அடித்து விளையாடுவோம், இப்போது மாணவர்கள் மேசை உடைத்து விளையாடுகிறார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளி வகுப்பறையை சேதப்படுத்தியுள்ளனர்.

மாணவ, மாணவர்கள் அமர பயன்படுத்தும் மேஜை, டேபிள் போன்றவற்றை கட்டையால் அடித்து உடைத்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மாணவர்களுடன் சேர்ந்து மாணவிகளும் வகுப்பறையை சேதப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வு முடிந்து இன்னும் சில தினங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. பள்ளி கல்வி முடிந்ததை கொண்டாடும் வகையில் வகுப்பறையில் உள்ள மேஜை நாற்காலிகளை உடைத்து விளையாடியுள்ளனர். இவ்வாறு அநாகரிகமான செயல்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பள்ளியில் படிக்கும் மாணவா்களின் பெற்றோர் வேண்டுகோளாக உள்ளது. மேஜை உடைத்ததால் அடுத்த கல்வி ஆண்டு வரும் மாணவர்களுக்கு அமர மேஜை இல்லாததால் அவர்கள் தரையில் அமரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .
இதனிடையே பள்ளி வகுப்பறை மேஜைகளை அடித்து உடைத்த மாணவ, மாணவிகள் 5 பேரை சஸ்பெண்ட் செய்து தருமபுரி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், முன்பொல்லாம், தேர்வு முடிந்ததும் இங்க் அடித்து விளையாடுவோம், இப்போது மாணவர்கள் மேசை உடைத்து விளையாடுகிறார்கள் என்று கூளினார்.
மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 8ம் வகுப்பு வரையில் மாணவர்களின் கல்வி நிலை குறித்து சர்வே எடுக்க சொல்லியிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications