விபத்தில் உயிரிழந்த காதலனுடன் "பேய் கல்யாணம்.." அதிர வைத்த ஆசைக் காதலி!
சென்னை: சீனாவின் சுமார் மூன்றயிரம் ஆண்டுகள் பழமையான முறைதான் இந்த கோஸ்ட் வெட்டிங். திருமணம் செய்து கொள்ளாமல் உயிரிழந்தவர்கள், நிச்சயமான பின்னர் இறந்தவர்கள் மரணத்துக்குப் பின்னர் தனக்கென யாரும் இல்லை என்று வேதனை அனுபவிப்பதாக நம்பப்படுகிறது.
எனவே, உயிரிழந்த நபரை நேசித்தவர் தங்களது சொந்தபந்தங்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொள்ளும் சடங்குதான் பேய் திருமணம் எனும் கோஸ்ட் வெட்டிங். இறந்தவர்களின் போட்டோ, அவர்களது உடைகள், அவர்கள் பயன்படுத்திய பொருள்களை வைத்து இந்த திருமணம் கோலாகலமாக நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில், தைவானில் கார் விபத்தில் உயிரிழந்த காதலனை பழமைவாய்ந்த கோஸ்ட் வெட்டிங் முறையில் கரம்பிடிக்க அவரது காதலி முடிவு செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தைவான் நாட்டைச் சேர்ந்தவர் யூ என்ற இளம்பெண். இவர் தனது காதலர், நண்பர்களுடன் ஜூலை 15 ஆம் தேதி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, துரதிர்ஷ்டவசமாக கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், காரில் இருந்த 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் உயிர்பிழைத்த நிலையில், யூவின் காதலன் மட்டும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து யூ பேசுகையில், அந்த கோர சம்பவம் இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. விபத்து ஏற்பட்டதில் எனது காதலன், அவரது சகோதரி, எங்களது நண்பர் மூவரும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தனர். என் காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தபோதிலும் அவர்களைக் காப்பற்ற முயற்சித்தேன். கடைசியில் என் காதலனை நான் பறிகொடுத்து விட்டேன். உண்மையான எங்களது காதலை கவுரவப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். எனது காதலனின் தாயை கவனித்துக் கொள்ளவும், எனது வாழ்க்கையை அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications