ஆடியோ லீக் புகழ் டெய்சியிடமிருந்து பதவியை பறிக்கணும்! பாஜக சிறுபான்மையினர் அணியினர் போர்க்கொடி!
சென்னை: பாஜக சிறுபான்மையினர் அணி தலைவர் பதவியிலிருந்து டெய்சியை மாற்ற வேண்டும் என அக்கட்சியின் சிறுபான்மையினர் அணி நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
திருச்சி சிவா மகன் சூர்யாவுடனான அலைபேசி உரையாடல் ஆடியோ லீக் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பாஜகவை சேர்ந்த டெய்சி. தன்னை இயற்கை மருத்துவர் எனக் கூறிக்கொள்ளும் இவர், மருத்துவ டிப்ஸ்களை யூடியூப்பில் வீடியோக்களாக வெளியிட்டு சமூக வலைதளங்களில் பிரபலமானவர். அது மட்டுமல்ல சென்னை, கோவையில் மருத்துவமனைகளும் நடத்தி வருகிறார்.

டெய்சியை போலவே அவரது மகள் ஷர்மிகாவும் மருத்துவ டிப்ஸ் என்ற பெயரில் பல சர்ச்சையான வீடியோ பதிவுகளை வெளியிட்டு, இந்திய மருத்துவ கவுன்சிலின் விசாரணையை எதிர் கொண்டார். குறிப்பாக நுங்கு சாப்பிட்டால் என்னவாகும் என்ற தலைப்பில் ஷர்மிகா கொடுத்த டிப்ஸ் தான் அவரை சர்ச்சையில் சிக்க வைத்தது.
இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற பாஜக மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அண்ணாமலையிடம் டெய்சி மீது பக்கம் பக்கமாக புகார் வாசித்திருக்கின்றனர் பாஜக சிறுபான்மையினர் அணி நிர்வாகிகள். மேலும், உங்கள் பெயரை தவறாக பயன்படுத்தி நிர்வாகிகள் நியமன விவகாரத்தை டெய்சி கையாள்வதாகவும் முறையிட்டுள்ளனர்.
ஏற்கனவே இருக்கின்ற பிரச்சனை போதாதென்று இது வேறா என அந்த புகார்களை கேட்டுக்கொண்ட அண்ணாமலை, டெய்சி மீதான நிர்வாகிகளின் புகாரை விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் டெய்சியை மாற்றிவிட்டு வேறு ஒருவரை பாஜக சிறுபான்மையினர் அணி தலைவராக கொண்டு வர வேண்டும் என அந்த அணியின் நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
டெய்சி பொறுப்பில் இருக்கும் வரை பாஜக சிறுபான்மையினர் அணியில் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடக்காது என்பதோடு புதிதாக யாரும் சேரவும் மாட்டார்கள் என அதிருப்தி நிர்வாகிகள் புகார் கூறியுள்ளனர். இவர்களின் இந்தப் புகார் பற்றி விளக்கம் அறிய பாஜக சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சியை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் அலைபேசி அழைப்புகளையே எடுக்கவில்லை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications