10 நாட்களுக்குள்! நீக்கப்பட்டவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும்! எடப்பாடிக்கு செங்கோட்டையன் காலக்கெடு
சென்னை: தேர்தல் நெருங்குகிறது அதனால் விரைவில் அதிமுக கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும், 10 நாட்கள்தான் காலக்கெடு - அதற்குள் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு செங்கோட்டையன் காலக்கெடு விதித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் , எம்ஜிஆர் தொடங்கிய காலத்தில் இருந்தே அதிமுகவில் இருக்கிறேன். எம்ஜிஆரின் செல்வாக்கு நாடே வியக்கத்தக்க அளவில் இருந்தது. எம்ஜிஆர் வழியில் என்றும் செயல்படுபவன் நான். அதிமுகவிற்கு மாபெரும் வெற்றிகளை ஈட்டித்தந்த தலைவர் எம்ஜிஆர். என்னை அழைத்து மனதார பாராட்டி புகழ்ந்தவர் எம்ஜிஆர்.

சத்தியமங்கலம் தொகுதியில் என்னை எம் ஜி ஆர் போட்டியிட சொன்னார் அந்த தொகுதி எனக்கு புதிதானது அங்கு நான் என்ன செய்ய முடியும் என கேட்டேன் என் பெயரை சொல் நீ வெற்றி பெறுவாய் என எம் ஜி ஆர் என்னிடம் சொன்னார் . எம்ஜிஆர் பெயரை சொன்னாலே போதும் தேர்தலில் வெற்றி பெறலாம். சாதாரண கிளை செயலாளராக தான் எனது வாழ்க்கையை தொடங்கினேன். பிறகு முக்கிய பொறுப்புகளை எனக்கு கொடுத்து தலைவர்கள் அளித்து அழகு பார்த்தனர்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு செங்கோட்டையன் காலக்கெடு
எம்ஜிஆர் போலவே ஆளுமை மிக்க தலைவராக, முதல்வராக ஜெயலலிதா இருந்தார். தலைவர் எம்ஜிஆர் க்கு பிறகு ஆளுமை மிக்க தலைமை கட்சிக்கு தேவைப்படுகிறது நீங்கள் தான் அந்த பொறுப்பை ஏற்க வேண்டும் என நாங்கள் அனைவரும் ஜெயலலிதா அவர்களிடம் கேட்டுக் கொண்டோம் அவரும் கட்சி பொறுப்பை ஏற்ற பிறகு ஆட்சியையும் மிகச் சிறப்பாக நடத்தினர்.
ஜெயலலிதா மறைவிற்கு பின் பல குழப்பங்கள் ஏற்பட்டது. இயக்கம் உடைய கூடாது என்றுதான் சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தோம். காலச்சக்கரம் சுழன்ற பின் இப்போது எதிர்க்கட்சி தலைவராக இருப்பவரை அப்போது முதல்வராக சசிகலா அறிவித்தார். கட்சிக்காக எல்லா பணிகளையும் நான் ஆற்றி இருக்கிறேன். எனக்கு 2 வாய்ப்புகள் கிடைத்தது, ஆனால் கட்சி உடையக்கூடாது என்று பார்த்தேன்.
2016க்கு பின் தொடர்ந்து தேர்தலை நாம் சந்திக்கிறோம். 2016க்கு பின் வரிசையாக பல தேர்தலில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம். பாஜக உடன் கூட்டணி வைத்து இருந்தால் 2024ல் 30 இடங்களில் வென்று இருப்போம். வேலுமணி கூட அதை குறிப்பிட்டு பேசினார். கழகம் தொய்வோடு இருக்கிறது என்று எடப்பாடியிடம் கூறினோம். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் மறப்போம் மன்னிப்போம் என எடப்பாடி பழனிச்சாமி இடம் சொன்னேன். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை.
எடப்பாடி பழனிச்சாமி vs செங்கோட்டையன்
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். மறப்போம் மன்னிப்போம் என எடப்பாடி பழனிச்சாமி இடம் சொன்னேன். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. தேர்தல் நெருங்குகிறது அதனால் விரைவில் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும்.
பிரிந்தவர்களை சேர்க்கவில்லை என்றால் அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை நாங்கள் செய்வோம். எடப்பாடியிடம் 6 அமைச்சர்கள் சென்று , பிரிந்து போனவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி இடம் வலியுறுத்தினோம் அதை எதையும் கேட்க அவர் தயாராக இல்லை. வெளியே சென்றவர்களை தேர்தலுக்கு முன் கட்சியில் சேர்க்க வேண்டும், 10 நாட்கள்தான் காலக்கெடு - அதற்குள் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் , என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications