சாதாரண டிக்கெட்டை வாங்கி.. ரிசர்வேஷன் பெட்டிகளில் ஏறும் வட மாநில பயணிகள்.. தெற்கு ரயில்வே போட்ட போடு
சென்னை: முன்பதிவு பெட்டிகளில் அத்துமீறி ஏறுவதுடன், உடைமைகளை கொண்டு, ஆக்கிரமிப்பும் செய்து கொள்வதால், ரிசர்வ் செய்யப்பட்ட பயணிகள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.. பெரும்பாலும் பண்டிகை கால நேரத்தில் இதுபோன்ற அவஸ்தைகள் அதிகமாகி விடுகின்றன.. இந்நிலையில், தெற்கு ரயில்வே இதற்கு ஒரு கடிவாளத்தை போட்டுள்ளது.. இப்படி ரிசர்வ் செய்யப்பட்ட பெட்டிகளில் அத்துமீறி பயணிக்கும் நபர்கள் யார் என்பதை கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளதாம்.
ரயில்களில் சாதாரண டிக்கெட் எடுத்துக்கொண்டு முன்பதிவு பெட்டிகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை ரெயில்வே நிர்வாகமும் கண்டுகொள்ளாததால் பயணிகள் அவதிக்கு ஆளாக நேரிடுகிறது.

ரிசர்வேஷன் பயணிகள்
இதில் நிறைய ரெயில்கள் வடமாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது... ஆனால், முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணிப்பது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
சமீபத்தில்கூட ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், பயணிகளை ஏற்றுவதற்காக சென்ட்ரல் ஸ்டேஷன் வந்தது. அதில், S-3 பெட்டிக்காக ரிசர்வ் செய்யப்பட்ட பயணிகள் காத்திருந்தனர். ஆனால் ரயில், ஸ்டேஷனில் நிற்பதற்கு முன்பாகவே வடமாநிலத்தவர்கள், முன்பதிவு பெட்டியில் முண்டியடித்து கொண்டு ஏறினார்கள். இதனால் ரிசர்வ் செய்தவர்கள், சீட் இல்லாமல் அவதிப்பட்டனர்.
அதிலும், ரிசர்வ் செய்த 18 பயணிகள் அந்த ரயிலில் ஏறமுடியாமல் தவித்தனர். கடைசிவரை அவர்களால் ஏற முடியாமல், வேறு வழியின்றி வீடு திரும்பி சென்ற அவலமும் நேர்ந்தது நினைவிருக்கலாம்.
முன்பதிவு பெட்டிகள்
ரிசர்வேஷன் பெட்டிகளில், ரிசர்வ் செய்யப்படாதவர்கள் ஏன் ஏறுகிறார்கள்? வடமாநிலத்தவர்களை இப்படியே அனுமதித்தால், நாளடைவில் வடமாநிலங்களில் உள்ள ரெயில் பயணம்போல தமிழ்நாடு ரெயில் பயணம் மாறிவிடும் என்பதால் தெற்கு ரெயில்வே இதுக்கு ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்று பயணிகள் நொந்து போய் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இப்போது தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது.. எனவே தமிழகத்திலுள்ள வடமாநில தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊருக்கு பயணமாகி வருகிறார்கள்.. அந்தவகையில், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனும் படுபிஸியாகவே காணப்படுகிறது.
திருப்பூர் ரயில் பெட்டி
2 நாட்களுக்கு முன்பு, கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா செல்லும் விரைவு ரயில் திருப்பூர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது.. அப்போது ரிசர்வ் செய்யாமல் இருந்த பயணிகள் ஏராளமானோர், டிசர்வேஷன் பெட்டிகளில் ஏறிவிட்டதால், முன்பதிவு செய்து பயணித்து வந்த பயணிகள் பலரும் அவதிக்கு ஆளானார்கள்..
ரெயில்வே துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், டிக்கெட் பரிசோதகரையும் முற்றுகையிடும் நிலைமை சென்றது.. ஆனால் அப்போதுகூட, டிக்கெட் பரிசோதகர் உரிய பதில் சொல்லாததால் முன்பதிவு செய்த பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துவிட்டார்கள். இதனால் அத்துமீறி ரயிலில் பயணம் செய்பவர்களை செல்போனில் வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டனர்.
தெற்கு ரயில்வே கடிவாளம்
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பொதுமக்களுக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின்போதும், வடமாநில மக்கள் இப்படித்தான் அத்துமீறலில் ஈடுபடுகிறார்கள், இதற்கு ரயில்வே நிர்வாகம் ஒருமுடிவு கட்ட வேண்டும் என்று பலரும் கமெண்ட்களை பதிவிட துவங்கிவிட்டனர்.
இந்நிலையில், பயணிகள் அத்துமீறி ஏறுவதை முறைப்படுத்த போலீசாருக்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட் இன்றி பயணம் செய்வதை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில்வே போலீசாருக்கு தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications