தலைவர்களை பற்றி பேசினால் மட்டும் போதாது! வழி நடக்கணும்! நடிகர் விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் அட்வைஸ்!
சென்னை: பெரியார், அம்பேத்கர், காமராஜர் என நடிகர் விஜய் தலைவர்களை பற்றி பேசினால் மட்டும் போதாது அவர்களின் கொள்கைப்படி வழிநடக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அட்வைஸ் செய்திருக்கிறார்.
நடிகர் விஜய்க்கு பாமக தலைவர் அன்புமணி அளிக்கும் 2வது அறிவுரை இதுவாகும். ஏற்கனவே சினிமா படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் விஜய் நடிக்கக் கூடாது என கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு தான் அறிவுரை வழங்கியிருந்தார். அதற்குள் இன்னொரு அறிவுரையையும் நேற்று வழங்கியுள்ளார்.

நடிகர் விஜயின் அரசியல் வருகையை உறுதி செய்யும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது. அதேபோல் கடந்த ஊரக உள்ளாட்சி இடைத் தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர் அடுத்தடுத்த தேர்தல்களை எதிர்கொள்வதற்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்த அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவராத சூழலிலும், அவரது ஒவ்வொரு நகர்வையும் அரசியல் கட்சிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கி அவர்களுடன் கலந்துரையாடிய நடிகர் விஜய், பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகிய 3 தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களை அறிந்துகொள்ள வேண்டும் என பேசியிருந்தார்.
இதனிடையே தலைவர்களை பற்றி பேசினால் மட்டும் போதாது அவர்களின் கொள்கைப்படி வழி நடக்க வேண்டும் என விஜயை கேட்டுக் கொண்டுள்ளார் அன்புமணி ராமதாஸ். திடீரென விஜய்க்கு இப்படியொரு அறிவுரை வழங்கியதற்கான காரணம் தெரியவில்லை.
மேலும், தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு தமிழகத்தின் வளர்ச்சியை தான் பாதிக்கச் செய்யும் என அன்புமணி கவலை தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications