சென்னையே இனி அண்ணாந்து பார்க்கும்.. வானளவில் வரப்போகும் பெரிய ப்ரொஜெக்ட்.. ஈசிஆர் ஆட போகுது
சென்னை: சென்னையின் மிக உயரமான கட்டிடம் ஈசிஆர் பகுதியில் வர உள்ளது. இங்கே பல்வேறு கட்டிடங்கள் அடுத்தடுத்து கட்டப்படும் நிலையில் சென்னையின் உயரமான கட்டிடங்களில் ஒன்றும் இங்கே வர உள்ளது.
சென்னையைச் சேர்ந்த வூரா குழுமம், மாயாஜால் அருகே இந்த கட்டிடத்தை கட்ட உள்ளது. கடல் வியூ இருக்கும் வகையில் உயரமான குடியிருப்பு வளாகத்தை அமைக்க உள்ளது. 42 தளங்களைக் கொண்ட 2 கோபுரங்களும், 13 தளங்களைக் கொண்ட 2 கோபுரங்களும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

வூரா குழுமம் சென்னையில் உள்ள பிரபலமான ரியல் எஸ்டேட் டெவலப்பர்களில் ஒன்றாகும். ரியல் எஸ்டேட் துறையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், வூரா சென்னையில் மட்டும் 2 மில்லியன் சதுர அடிக்கு மேல் கட்டிடங்களை, நிலங்களை விற்று உருவாக்கியுள்ளார்.
சென்னையில் உள்ள உயரடுக்கு சொத்து உருவாக்குபவர்களில் இந்த நிறுவனம் முன்னிலையில் இருக்கிறது, மலிவு விலையில் உள்ள பிரீமியம் அடுக்குமாடி குடியிருப்புகள் முதல் ஆடம்பரமான வில்லாக்கள் வரை, பல்வேறு முக்கிய கட்டுமானங்களை இந்த நிறுவனம் கட்டி உள்ளது. இப்போது அமைக்கப்பட உள்ள கட்டிடங்கள் சென்னையில் உயரமான கட்டிடங்களில் ஒன்றாக மாற உள்ளது.
கட்டுமானம்; இது போக போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரே 27 மாடிகளைக் கொண்ட பிரமாண்டமான கட்டிடத்தை கட்டுவதற்கான டெண்டர் பணிகளில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இதற்கான கட்டுமானம் தற்போது தொடங்கி உள்ளதாம்.,

இந்த நிலையில்தான் சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள சென்ட்ரல் ரயில் நிலையம் மிகவும் பரபரப்பான இடம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தினமும் பல லட்சம் பேர் இந்த ரயில் நிலையத்திற்கு வருகிறார்கள். போதிய இடவசதி இல்லாததால், பயணிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
கட்டிடம் வருகிறது: இங்கு வாகனங்களை நிறுத்துவது போன்ற பிரச்னைகளும் உள்ளன. வரும் ஆண்டுகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்பது உண்மை. அதே சமீபத்தில் இங்கே சென்ட்ரல் பிளாசா அமைக்கப்பட்டது. இதனால் முன்பை விட இந்த பகுதியில் பெரிய அளவில் மாற்றங்கள் நடந்துள்ளன.
இந்த நிலையில்தான், இங்கு 27 மாடி கட்டிடம் கட்ட சிஎம்ஆர்எல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரே 400 கோடி ரூபாய் செலவில் மத்திய சதுக்கம் அல்லது மத்திய சதுக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திட்டத்தின் கீழ், சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையம், ரிப்பன் கட்டிடங்கள், RGGGH மற்றும் பார்க் ரயில் நிலையம் போன்றவற்றை இணைக்க ஒரே சுரங்கப்பாதை அமைக்கப்படும். இந்த மையச் சதுக்கத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

பிரம்மாண்ட திட்டம்: இங்கு, CMRL நிறுவனம், 27 மாடிகள் கொண்ட பிரமாண்டமான கட்டடத்தை கட்ட திட்டமிட்டுள்ளது. சென்ட்ரல் பிளாசா என்பது பயணிகளுக்கு மல்டிமாடல் பயணத்தை எளிதாக்கும் விதமாக காட்டப்படுகிறது. அதாவது மெட்ரோ - ரயில் - பேருந்து இடையே எளிதாக மாறும் விதமாக இந்த பிளாசா காட்டப்படுகிறது. ₹400 கோடி சென்ட்ரல் ஸ்கொயர் திட்டத்தின் ஒரு பகுதியாகவே தற்போது அங்கே பிரம்மாண்ட கட்டிடம் கட்டப்பட உள்ளது.
தனியார் இந்த கட்டிடத்தை நிர்வகிக்க உள்ளனர். 1,650 பைக்குகள் மற்றும் 600 கார்களுக்கு இடமளிக்கும் திறன் கொண்ட ஒரு பெரிய மல்டிலெவல் அண்டர்கிரவுண்ட் வாகன நிறுத்துமிடம் இங்கே தயாராக உள்ளது. வாகனம் நிறுத்தும் இடத்திற்கு மேல் பிளாசா கட்டப்படும். சில ஆண்டுகளுக்கு முன்பு திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், இந்த கட்டிடத்தின் வடிவமைப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. .
-
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications