தாம்பரம் சேலையூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வங்கதேச ராணுவத்தால் அதிரடியாக கைது.. பரபரப்பு தகவல்
சென்னை: சட்டவிரோதமாக எல்லையை கடக்க முயன்ற புகாரில் தாம்பரம் சேலையூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜான் செல்வராஜ் வங்கதேச ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சட்டவிரோதமாக எல்லையை கடக்க முயன்ற புகாரில் தாம்பரம் சேலையூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜான் செல்வராஜை நாங்கள் கைது செய்திருக்கிறோம் என்று வங்கதேச ராணுவம், தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுலவகத்திற்கு தகவல் அனுப்பி உள்ளது.

சென்னை தாம்பரம் சேலையூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக (எஸ்எஸ்ஐ ) ஜான் செல்வராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் திருச்சியாகும். இவர் மடிப்பாக்கத்தில் தங்கி இருந்தபடி சேலையூர் போலீஸ் ஸ்டேசனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். ஜான் செல்வராஜ் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மருத்துவ விடுப்பில் தொடர்ந்து இருந்து வந்த ஜான் செல்வராஜ், அண்மையில் மருத்துவ விடுப்பை நீட்டிக்கும் படி கடிதமும் அனுப்பி உள்ளார். இந்நிலையில் சேலையூர் எஸ்எஸ்ஐ ஜான் செல்வராஜ், சட்டவிரோதமாக எல்லையை கடக்க முயன்ற புகாரில் வங்கதேச ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுலவகத்திற்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சேலையூர் காவல் நிலையத்தில் குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் பணிகளை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜ் செய்து வந்தார். இவர் ஏற்கனவே ஒரு முறை திருச்சியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அடிக்கடி விடுமுறை எடுத்து வந்துள்ள ஜான் செல்வராஜ், தற்போது மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார்.
தற்போது மருத்துவ விடுப்பில் உள்ள ஜான் செல்வராஜ், சட்டவிரோதமாக வங்கதேச எல்லையை கடக்க முயன்ற புகாரில் வங்கதேச ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜுக்கு சட்டவிரோத கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல்துறை தரப்பில் விசாரணை நடந்து வருகிறது. தாம்பரம் சேலையூர் காவல் அதிகாரி, வங்கதேச ராணுவத்தால் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழக காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications