ஷாக்.. பிரபல நடிகர் கங்கா காலமானார்.. மாரடைப்பால் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி
சென்னை: தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வந்த நடிகர் கங்கா காலமானார். அவருக்கு வயது 63.
தமிழ் சினிமாவில் பன்முக கலைஞராக அறியப்படும் டி.ராஜேந்தரின் உயிருள்ள வரை உஷா திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் கங்கா. அதன்பிறகு கரையை தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட பல படங்களில் கங்கா நடித்துள்ளார்.

ஹீரோவாகவும், குணசித்திர நடிகராகவும் இவர் நடித்து வந்தார். குறிப்பாக பல திரைப்படங்களில் 2ம் கட்ட கதாநாயகனாக நடித்து பெயர் பெற்றார்.
இவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அதன்பிறகு சில சின்னத்திரை தொடர்களிலும் அவர் நடித்து வந்தார். இவர் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். தற்போது சகோதரர் குடும்பத்துடன் நடிகர் கங்கா வசித்து வந்தார்.
இந்நிலையில் தான் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இன்று மரணமடைந்தார். மறைந்த நடிகர் கங்காவுக்கு தற்போது வயது 63. இவரது இந்த மரணம் தமிழ் திரையுலகினரையும், அவரது ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
நடிகர் கங்காவின் சொந்தஊர் சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமம் ஆகும். இதனால் நாளை அவரது உடல் சிதம்பரம் எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்குகளுக்கு பிறகு தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருக்கு திரையுலகத்தை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் நாளை அஞ்சலி செலுத்த உள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications