சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கருணாநிதி சிலையை திறந்தபோது ஒலிபரப்பப்பட்ட எழுச்சி பாடல் எது தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    அறிவாலயத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா!

    சென்னை: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்காக, அண்ணா அறிவாலயம் வருகை தந்த நடிகர் ரஜினிகாந்தை, கைகுலுக்கி வரவேற்றார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

    கருணாநிதி சிலை திறப்பு விழாவின்போது, சிலை திறக்கப்பட்ட தருணத்தில் அவரால் எழுதப்பட்டு, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானால் இசையமைக்கப்பட்ட செம்மொழி மாநாட்டு பாடல் இசைக்கப்பட்டது.

    Tamil classical conference song played while Karunanidhi statue unveiled

    2010ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாடு தொடர்பாக அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி எழுதிய பாடல் வரிகளுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார்.

    இந்த பாடலை கவுதம் மேனன் இயக்கி இருந்தார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என்று தொடங்கக் கூடிய இந்தப் பாடல், செம்மொழியான நம் தமிழ் மொழியாம் என்ற வரிகளால் மிகவும் பிரபலமானது.

    இன்று அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறக்கப்பட்டதுமே, இந்த பாடல்தான் எழுச்சியுடன் ஒலித்தது.

    English summary
    Tamil classical conference song which was written by Karunanidhi and composed by AR Rahman was played while Karunanidhi statue was unveiled by UPA chairperson Sonia Gandhi in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X