Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னாது அங்கே போகப் போறாரா வடிவேலு.. வலை வீசும் பாஜக.. சிக்குமா "வைகைப் புயல்"?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் வடிவேலுவை பாஜகவில் இணைப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது அக்கட்சியின் தமிழக தலைமை.

ஏற்கனவே ஒரு பெரிய நட்சத்திர பட்டாளம் பாஜகவில் ஐக்கியமாகியுள்ள நிலையில் அடுத்தடுத்து ஆட்களை இழுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன.

பாஜகவின் அழைப்பு தொடர்பாக நடிகர் வடிவேலு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திமுகவுக்கு பிரச்சாரம்

திமுகவுக்கு பிரச்சாரம்

தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் மக்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் வடிவேலு. அவரது நகைச்சுவைக் காட்சிகள் ஒளிக்காத வீடுகள் இல்லை என்று கூட சொல்லலாம். இதென்ன சின்னப்புள்ள தனமா இருக்கு... ஹைய்யோ..ஹைய்யோ.. சண்டையில் கிழியாத சட்டை எங்கிருக்கு, போங்க தம்பி.. உள்ளிட்ட அவர் பேசிய பல வசனங்கள் எத்தகைய சூழ்நிலைக்கும் பொருத்தமாக இருந்து வருகிறது.

வடிவேலு ஆலோசனை

வடிவேலு ஆலோசனை

இப்படி பல பெருமைகளுடைய வடிவேலுவை பாஜகவில் இணைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. வரும் சட்டமன்றத் தேர்தலில் வடிவேலுவை பிரச்சார பீரங்கியாக களமிறக்கும் திட்டத்தில் உள்ள எல்.முருகன் அதற்கான முன்னெடுப்புகளை 70 % வரை முடித்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அடி மேல் அடி வைத்தால் அம்மியும் கரையும் என்பது போல் அரசியலே வேண்டாமப்பா என்றிருந்த வடிவேலு இப்போது இது குறித்து தனது நலம் விரும்பிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அரசியல் முத்திரை

அரசியல் முத்திரை

ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு திமுகவில் இணைந்து அந்தக் கட்சிக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் திமுக வெற்றிபெறாததால் அவரது சினிமா பாதையே தடம்புரண்டது. 2011-ம் ஆண்டுக்கு முன் இருந்த பரபரப்பும் பிஸியும் வடிவேலுவிடம் இல்லை. பெயருக்கு ஒன்றிரண்டு படங்களில் நடிக்கச் செய்தார். அரசியல் முத்திரை வந்துவிட்டதால் அவரை நடிக்க வைக்க இயக்குநர்கள் பலரும் தயங்கினர்.

சினிமா பிரபலங்கள்

சினிமா பிரபலங்கள்

இந்நிலையில் மீண்டும் 10 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் அழைப்புகள் வடிவேலுவை நோக்கி வந்துள்ளது. கங்கை அமரன், ராதாரவி, சுரேஷ், குட்டி பத்மினி, கவுதமி, நமீதா, குஷ்பு, இயக்குநர் பேரரசு, என ஏற்கனவே பாஜகவில் சினிமா பிரபலங்கள் பலர் ஐக்கியமாகியுள்ள நிலையில் அந்த வரிசையில் வடிவேலுவும் விரைவில் இடம்பெறுவார் எனக் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+