Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மயிலாடுதுறை பூம்புகாரில் சபாஷ்.. ஆழ்கடலிலும் ஆராயப்படும் தமிழர் வரலாறு.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: மயிலாடுதுறை பூம்புகாரில் பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.. இந்திய கடல்சார் பல்கலை. உதவியுடன், தொல்லியல் துறை சார்பில் இந்த ஆய்வு பணிகள் நடைபெறுகின்றன. தமிழர் வரலாறு குறித்து ஆழ்கடலில் ஆய்வு செய்யப்படுவது குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் ஒன்றையும் முதலமைச்சர் பதிவிட்டிருக்கிறார்.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில், பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட அகழாய்வில் மண் பானை, பகடைக்காய், உழவுத் தொழிலுக்கு பயன்படுத்தும் கல்லால் ஆன கருவி உள்ளிட்ட தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டன.

mayiladuthurai poompuhar Stalin

கீழடி அகழ்வாய்வு பணிகள்

ஏற்கனவே பல கட்ட அகழ்வாய்வு பணிகள் கீழடியில் நடத்தப்பட்ட நிலையில்,பழமையான உறை கிணறுகள், செங்கல் சுவர்கள், கூரை ஓடுகள், மண்பாண்டங்கள், அணிகலன்கள், தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதனை பொதுமக்கள் பார்வையிட பலகோடி ரூபாய் மதிப்பில் நவீன அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல , கீழடி அகழாய்வு மையப்பகுதியிலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள கொந்தகை என்ற ஈமச்சடங்கு தளத்தில் இருந்து 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. கீழடி அகழாய்வின் வாயிலாக, தமிழர்களின் வைகை ஆற்று நாகரிகம், 2,500 ஆண்டுகள் முதல் 3,000 ஆண்டுகள் வரை பழமையானது என்பது தெளிவாகிறது.

கீழடி அகழ்வாராய்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரத்யேக கவனத்தை செலுத்தி வருகிறார்..

எனவேதான், இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதை சான்றுகளின் அடிப்படையில் நிறுவுவதே தமிழ்நாடு அரசின் கடமை என்றும், தமிழரின் பண்பாட்டு பெருமையை நிலைநாட்டும் வரை போராட்டம் ஓயவே ஓயாது என்றும் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை மற்றும் தொடர்ச்சியை உலகறியச் செய்திட எந்நாளும் உழைப்போம் என்றும் பலமுறை முதலமைச்சர் கூறி வருகிறார்,

மயிலாடுதுறை பூம்புகார்

அதுமட்டுமல்ல, தமிழ்ப் பண்பாட்டின் காலம் 5300 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை கொண்டதாக இருப்பதை இரும்பின் தொன்மை என்ற பன்னாட்டுத் தரத்திலான ஆய்வுகள் வாயிலாக நிரூபித்தும்கூட, தமிழ்ப் பண்பாட்டின் பெருமைக்குரிய இரும்பின் தொன்மை முடிவுகள் குறித்து ஒரு 'ட்வீட்' போடக்கூட பிரதமர் தொடங்கி பாஜக ஆட்சியினருக்கு மனம் வரவில்லை என்று கடுமையாக சாடியும் வருகிறார்.

இந்நிலையில்தான், மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக இருந்த காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள "பூம்புகாரில்" பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடலுக்கு அடியில் ஆய்வுகள் மேற்கொள்ளும் இப்பணியினை பேராசிரியர் கே.ராஜனின் தலைமையில், தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் அவர்களை உள்ளடக்கிய வல்லுநர் குழு தொடங்கியுள்ளது.

சபாஷ் முதல்வர் ஸ்டாலின்

இதுகுறித்து பெருமிதம் தெரிவித்திருந்த அமைச்சர் தங்கம் தமிழ்செல்வன், "பழந்தமிழர்களின் தொன்மையை வெளிக்கொணர்வதில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் முயற்சிக்கும், நம் பாரம்பரியத்தை உலகரியச் செய்வதில் அவரது ஈடுபாட்டிற்கும், இந்த ஆய்வுகள் சிறந்த எடுத்துக்காட்டாகும்" என்று ட்வீட் போட்டு பூரிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த ட்வீட்டை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆழ்கடலில் ஆய்வு செய்யப்படுவது குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்

இது தொடர்பாக முதலமைச்சர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், கீழடி நம் தாய்மடி எனச்சொன்னோம்.. இரும்பின் தொன்மையை உலகுக்கு உணர்த்தினோம். அடுத்து, "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்..." என பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்.

மயிலாடுதுறை பூம்புகாரில் பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.. இந்திய கடல்சார் பல்கலை. உதவியுடன், தொல்லியல் துறை சார்பில் இந்த ஆய்வு பணிகள் நடைபெறுகின்றன. தமிழர் வரலாறு குறித்து ஆழ்கடலில் ஆய்வு செய்யப்படுவது குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் ஒன்றையும் முதலமைச்சர் பதிவிட்டிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+