இதுதான் திமுகவின் பவர்! தமிழுக்காக.. மோடி முன் ஸ்டாலின் சொன்ன வார்த்தை! விஜய் எல்லாம் சும்மா!
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக இணைக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் இன்று சட்டமன்றத்தில் தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார். ஆனால், இதற்கு முன்னர் திமுக அரசு 3 முறை இதற்காக தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறது. மட்டுமல்லாது பிரதமர் முன்னிலையில் மு.க.ஸ்டாலின் இது குறித்து வைத்த கோரிக்கையும் தற்போது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
முதலமைச்சர் விஜய் இந்த தீர்மானம் குறித்து சட்டமன்றத்தில் பேசிய உடன், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எழுந்து.. தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர திமுக காலத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து விளக்கமளித்திருந்தார்.

அவர் பேசியதாவது, "முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியில்.. 2006ஆம் ஆண்டில் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக கொண்டுவரப்பட வேண்டும் என்கின்ற தீர்மானத்தை ஏக மனதாக சட்டமன்றத்தில் நிறைவேற்றி.. அதை ஆளுநர் மூலமாக குடியரசு தலைவருக்கு அனுப்பி, குடியரசுத் தலைவர் அதனை உச்ச நீதிமன்றத்திற்கு இன்றைய கொலிஜியத்த்திற்கு அனுப்பப்பட்டது. சட்ட சொற்கள் எல்லாம் தமிழிலே மொழிபெயர்க்கப்படவில்லை. இன்னும் தரவுகள் தரப்படவில்லை என்கின்ற காரணத்தால்.. உயர் நீதிமன்றத்திலே தமிழ் ஆட்சி மொழியாக வருவது அன்றைக்கு தடுக்கப்பட்டதே தவிர.. அது நிச்சயமாக முடியாது என்று மறுக்கப்படவில்லை.
தரவுகள் தந்தால் வழக்காடு மொழியாக்கப்படும் என்று சொன்னார்கள். எனவே இதற்காக பிள்ளையார் சுழியை போட்டு துவக்கி வைத்து உயர்நீதிமன்றத்திலே தமிழ் வழக்காடு மொழியாக வரவேண்டும் என்று குரல் கொடுத்த முதல் தலைவர் நம்முடைய தலைவர் கலைஞர்தான்.
நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இங்கே அறிமுக உரையிலே சொல்லுகிற பொழுது, நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது எனில், அது எப்படிப்பட்ட வழக்கு? என்ன நிலுவைகள் இருக்கின்றன? எனபது சாமானிய மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அப்படிப்பட்ட தமிழ் வழக்காடு மொழியாக நடைமுறைக்கு வர வேண்டும் என்று பேசியிருந்தார்.
ஆானல், இதற்கெல்லாம் முன்பு.. உச்ச நீதிமன்றத்தினுடைய நீதி ரமாணா அவர்களுடைய முன்னிலையில் தமிழில் வழக்காடு மொழியாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தவர் மாண்புமிகு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின். நீதியரசர் ரமணா அவர்கள் முன்னிலையில்.. உச்சநீதிமன்றத்தினுடைய கிளை தென்மாநிலங்களுக்கு.. குறிப்பாக சென்னையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முதன் முதலில் வைத்தவர் எங்களுடைய தலைவர் மு.க ஸ்டாலின்தான்.
அடுத்து வழக்காடு மொழி, மதுரையில் நடந்த நிகழ்ச்சியிலே உச்ச நீதிமன்றத்தினுடைய நீதியரசர் சந்திர சூட் அவர்கள் பங்கேற்ற போது மு.க.ஸ்டாலின் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியிருந்தா். அதேபோல பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியும்.. சென்னையிலே 2022 ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சியிலே அவருடைய முன்னிலையிலே தைரியமாக தமிழ்நாட்டினுடைய உயர்நீதிமன்றத்தினுடைய வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வர வேண்டும் என்று குரல் எழுப்பிய தலைவர் எங்களுடைய தலைவர் ஸ்டாலின்தான் என்று கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
