சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மைசூரிலுள்ள தமிழ் கல்வெட்டுகள் சென்னைக்கு இடமாற்றம்": கே.பாலகிருஷ்ணன், வேல்முருகன் வலியுறுத்தல்

மைசூரிலுள்ள தமிழ் கல்வெட்டுகள் சென்னைக்கு இடமாற்றம் செய்ய வேல்முருகன் கேட்டு கொண்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "மைசூரிலுள்ள தமிழ் கல்வெட்டுகள் சென்னைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்" என்று எம்எல்ஏ வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் அனைத்தையும் பாதுகாப்பாக 6 மாதத்திற்குள் சென்னைக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருக்கிறது.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவன தலைவரும் எம்எல்ஏவுமான வேல்முருகன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

LIC -யை தனியார்மயமாக்க ஒன்றிய அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது... வேல்முருகன் சாடல்..! LIC -யை தனியார்மயமாக்க ஒன்றிய அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது... வேல்முருகன் சாடல்..!

கல்வெட்டு

கல்வெட்டு

"1966ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் அளவீட்டு துறை மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் மொழிவாரியாகவும், அகரவரிசைப்படியும், எண்ணிக்கையின்படியும் வகைப்படுத்தியதில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் கல்வெட்டுகள் தான் முதலிடத்தில் உள்ளது.

மைசூர்

மைசூர்

குறிப்பாக, 1966ஆம் ஆண்டில், தமிழில் 20,000 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. கன்னடம் 10,600, சமஸ்கிருதம் 7,500, தெலுங்கு 4500 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. 1887 முதல், சுமார் நானூறு ஆண்டுகளாக, கண்டறியப்பட்ட ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுக்களின் படிகள் இந்த இந்திய தொல்லியல் அளவீட்டு துறையின் மைசூர் அலுவலகத்தில் உள்ளன. இங்கு உள்ள ஒரு லட்சம் கல்வெட்டில் 65 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழில் உள்ளன. இக்கல்வெட்டுகள், தமிழர்களின் தொன்மையும், பண்பாட்டையும், வீரத்தையும் எடுத்துரைக்கும் சான்றுகளாகும்.

தொல்லியல் அறிஞர்

தொல்லியல் அறிஞர்

மைசூரில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழ் கல்வெட்டுகளை, பாதுகாக்கவோ, பராமரிக்கவோ, தமிழ் தெரிந்த தொல்லியல் அறிஞர்களை, ஒன்றிய அரசும் நியமிக்கவில்லை. அதனால், மிக முக்கிய ஆவணங்களான கல்வெட்டுப்படிகள், தமிழ் தெரியாத அலுவலர்களால் அழிக்கப்படுகிறது. அதே போன்று, பன்முகத்தன்மை வாய்ந்த இந்தியாவை ஒரே நாடு என்ற நிலையில் நிறுத்த விரும்பும் ஒன்றிய அரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்றவை, தமிழர்களின் கலாச்சாரத்தின் மீது வெறுப்பு கொண்டு, தமிழ் கல்வெட்டுகளையும், இதுவரை எடுத்த படிகளையும் அழிக்க முயன்று வருகின்றனர்.

மதுரை கோர்ட்

மதுரை கோர்ட்

தமிழகம் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள், மைசூருக்கு சென்று, கல்வெட்டு படிகளை ஆய்வு செய்ய அனுமதி கேட்டால், அங்குள்ள வட இந்திய அலுவலர்கள், அனுமதி மறுக்கின்றனர். இந்த நிலையில், மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள், தமிழ் வரலாற்று ஆவணங்கள் அனைத்தையும் 6 மாதத்திற்குள் சென்னைக்கு இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருப்பது வரவேற்கதக்கது. மேலும், கல்வெட்டியல் கிளையை தமிழ் கல்வெட்டியல் கிளை என பெயர் மாற்றம் செய்யவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஆவணங்கள்

ஆவணங்கள்

எனவே, உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவின்படி, தமிழர்களின் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் வகையில் மைசூருவில் வைக்கப்பட்டு உள்ள தமிழ்நாட்டின் கல்வெட்டுகள், தொல்லியல் ஆவணங்களை உடனடியாக சென்னை தொல்லியல் துறை அலுவலகத்திற்கு மாற்றவும், அக்கல்வெட்டுகள், ஆவணங்களை படிமம் எடுத்து டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருக்கிறார் வேல்முருகன்.

அறிக்கை

அறிக்கை

அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இது சம்பந்தமாக அறிக்கை ஒன்றினை வெளிட்டுள்ளது.. அந்த அறிக்கை இதுதான்: "மைசூரு மத்திய தொல்லியல் துறை மண்டல அலுவலகம் உட்பட நாடு முழுவதும் உள்ள தமிழ் கல்வெட்டுக்களை 6 மாதங்களுக்குள் சென்னைக்கு கொண்டு வர வேண்டும் என்றும், சென்னையில் உள்ள தொல்லியல் கல்வெட்டு பிரிவு அலுவலகத்தின் பெயரை "தமிழ் கல்வெட்டியல் பிரிவு அலுவலகம்" என மாற்றம் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வரவேற்கிறது.

வலியுறுத்தல்

வலியுறுத்தல்

தமிழ் கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள் மற்றும் தொல்லியல் சின்னங்கள் அனைத்தையும் பாதுகாத்து டிஜிட்டல்மயமாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஒன்றிய அரசின் பொறுப்பில் உள்ள மைசூரு மத்திய தொல்லியல் துறையின் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் கல்வெட்டுக்கள் பராமரிப்பின்றியும், படியெடுத்து பாதுகாக்கப்படாமலும் அழிந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. அதேபோல தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பழமையான தமிழ் கல்வெட்டுகளும் போதிய பராமரிப்பின்றி ஆவணப்படுத்தப்படாமல் சேதமடைந்து வருகின்றன.

Recommended Video

    Tirupati Murugan Mysterious history | மூலவர் முருகனா? பெருமாளா? | OneIndia Tamil
    ஆவணங்கள்

    ஆவணங்கள்

    இவை வெறும் கல்வெட்டுக்கள் அல்ல, தமிழக சமூக பண்பாட்டு வரலாற்றின் அரிய ஆவணங்கள் என்பதை கருத்தில் கொண்டு உயர்நீதிமன்றம் பொருத்தமான உத்தரவை பிறப்பித்துள்ளது. சென்னையில் உள்ள தொல்லியல் கல்வெட்டுப்பிரிவு அலுவலகத்திற்கு தேவையான பணியாளர்கள் உட்பட அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்து தமிழக வரலாற்றில் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்துள்ளது.

    English summary
    Tamil inscriptions Mysore should be transferred to Chennai, Says Vazhvurimai Velmurugan and CPM
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X