யூடர்ன்.. மனம் மாறிய அண்ணா பல்கலைக்கழகம் .. மெக்கானிக்கல், சிவில் என்ஜினியர்களே ஹேப்பியா இருங்க
சென்னை: 6 உறுப்பு கல்லூரிகளில் மெக்கானிக்கல், சிவில், குரூப்களில் ஆங்கில பாடப்பிரிவுகளும் தற்காலிகமாக மூடப்படுவதாக வெளியிட்ட அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மாணவர் சேர்க்கை இல்லாததன் காரணமாக 11 கல்லூரிகளில் தற்காலிகமாக தமிழ் பிரிவுகள் மூடப்படுவதாக தகவல் வெளியான நிலையில், அந்த முடிவையும் வாபஸ் பெற்றுள்ளது
பொறியியல் கல்லூரிகளில் நீண்ட காலமாக ஆங்கிலத்தில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், பிராந்திய மொழிகளிலும் பொறியியல் கல்வியை பயிற்றுவிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் கடந்த 2021ம் ஆண்டு ஒப்புதல் வழங்கியது. அதன்படி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, குஜராத்தி, வங்காளம் என 7 பிராந்திய மொழிகளில் கல்வி பயிலாம் என அறிவிக்கப்பட்டது.

அதேநேரம் தமிழகத்த்தில் அண்ணா பல்கலைக்கழகம் தமிழ் வழியில் பொறியில் படிப்புகளை நீண்ட காலமாக வழங்கி வந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தின் 17 உறுப்பு கல்லூரிகளில் சுமார் 1500 இடங்கள் தமிழ் வழியில் படிப்பவர்களுக்காக இருந்து வந்தது.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ் வழியில் பொறியியல் படிப்பை படித்து வருகிறார்கள். எனினும் தமிழ்வழியில் பொறியியல் பட்டப்படிப்பு படிக்க மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்தது. ஆங்கில வழியில் படித்தால் தான் வேலை கிடைக்கும் என்று நம்பும் மாணவர்கள் ஆங்கில வழியில் பிஇ படிக்கிறார்கள்.
இதன் காரணமாக ஆண்டுக்கு ஆண்டு தமிழ் வழியில் பொறியியல் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகங்களின் உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
6 உறுப்பு கல்லூரிகளில் மெக்கானிக்கல், சிவில், குரூப்களில் ஆங்கில பாடப்பிரிவுகளும் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், மாணவர் சேர்க்கை இல்லாததன் காரணமாக 11கல்லூரிகளில் தற்காலிகமாக தமிழ் பிரிவுகள் மூடப்படுவதாக தகவல் வெளியானது.
ஆரணி பொறியியல் கல்லூரி : பிஇ மெக்கானிக்கல் (தமிழ்வழி)
திண்டிவனம் பொறியியல் கல்லூரி பிஇ சிவில் (தமிழ்வழி)
விழுப்புரம் பொறியியல் கல்லூரி பிஇ மெக்கானிக்கல் (தமிழ்வழி)
திண்டுக்கல் பொறியியல் கல்லூரி: பிஇ மெக்கானிக்கல் (தமிழ்வழி) , பிஇ சிவில் (தமிழ்வழி)
ராமநாதபுரம் பொறியியல் கல்லூரி: பிஇ மெக்கானிக்கல் (தமிழ்வழி) , பிஇ மெக்கானிக்கல் (ஆங்கிலவழி) , பிஇ சிவில் (தமிழ்வழி)
அரியலூர் பொறியியல் கல்லூரி : பிஇ மெக்கானிக்கல் (தமிழ்வழி) , பிஇ மெக்கானிக்கல் (ஆங்கிலவழி) , பிஇ சிவில் (தமிழ்வழி) , பிஇ சிவில் (ஆங்கிலவழி)
பண்ருட்டி பொறியியல் கல்லூரி பிஇ மெக்கானிக்கல் (தமிழ்வழி) , பிஇ சிவில் (தமிழ்வழி)
பட்டுக்கோட்டை பொறியியல் கல்லூரி பிஇ மெக்கானிக்கல் (தமிழ்வழி) , பிஇ மெக்கானிக்கல் (ஆங்கிலவழி) , பிஇ சிவில் (தமிழ்வழி) , பிஇ சிவில் (ஆங்கிலவழி)
திருக்குவளை பொறியியல் கல்லூரி பிஇ மெக்கானிக்கல் (தமிழ்வழி) , பிஇ மெக்கானிக்கல் (ஆங்கிலவழி) , பிஇ சிவில் (தமிழ்வழி) , பிஇ EEE (ஆங்கிலவழி)
நாகர்கோவில் பொறியியல் கல்லூரி பிஇ மெக்கானிக்கல் (தமிழ்வழி) , பிஇ சிவில் (தமிழ்வழி)
தூத்துக்குடி பொறியியல் கல்லூரி பிஇ மெக்கானிக்கல் (தமிழ்வழி) , பிஇ மெக்கானிக்கல் (ஆங்கிலவழி) , பிஇ சிவில் (தமிழ்வழி)
மேற்கண்ட கல்லூரில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி படிப்புகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் நீக்கப்படாது என துணைவேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார். வரும் கல்வி ஆண்டு முதல் தற்காலிக நீக்கம் என்ற அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி எந்தப் பாடப்பிரிவும் நீக்கப்படாது என்றும் கூறினார். அடுத்த சிண்டிகேட் கூட்டத்தில் பாடங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications