”பாய்” என்பதை விட மாப்ளை, மச்சான்னு அழைப்பதையே தமிழ் முஸ்லிம்கள் விரும்புவார்கள்: அப்துல்லா
சென்னை: இசைப்புயல் ஏஆர் ரகுமான் (AR Rahman) தன்னை பாய் என்று அழைப்பது பிடிக்கவில்லை என்று கூறிய நிலையில், தமிழை தாய் மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்கள் பெரும்பாலும் பாய் என்று விளிக்கப்படுவதை விரும்புவதே இல்லை.. அண்ணே, தம்பி, மாப்ளை, மச்சான் என்று அழைப்பதையே விரும்புவார்கள். சுருக்கமா சொல்லணும்னா எப்படி "ஜீ" என்ற வார்த்தை தமிழ் இந்துக்களுக்கு அலர்ஜியோ அது மாதிரி இது தமிழ் முஸ்லீம்களுக்கு!" என்று புதுக்கோட்டை எம்பி அப்துல்லா கூறியுள்ளார்.
டிடியுடன் நடந்த நேர்காணலின் போது பேசிய இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், பாய் என்று என்னை அழைப்பது நன்றாக இல்லை என்றும் என்னை அவ்வாறு அழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியின் போது பேசிய டிடி, ஏ ஆர் ரகுமானிடம், "பெரிய பாய் பாட்டுக்கு யார் நோ சொல்வாங்க" என்று கேட்டார். உடனே அதற்கு சிரித்தபடியே, "பெரிய பாயா??..." என்றார்.

என்ன உங்களுக்கு தெரியாதா?.. இது தான் உங்களோட நிக் நேம் என்று டிடி பதில் கூற, இதற்கும் சிரித்தபடியே பேசிய ஏ ஆர் ரகுமான், "வேண்டாம்.. அது எனக்கு பிடிக்க வில்லை. பெரிய பாய், சின்ன பாய் என்று சொல்லிக்கிட்டு.." என்று சொன்னார். அதற்கு டிடி, 'அப்போ கட்.. இன்னிக்கே கட்..’ என்று சொன்னதும், ”நான் என்ன கசாப்பு கடையா வைத்திருக்கிறேன்" என்று ரகுமான் கூறினார். உடனே டிடியும் இன்றையில் இருந்து இதை கட் பண்ணிடுவோம் சார் என்று கூறினார்.
ஏ ஆர் ரகுமான் பாய் என்று என்னை அழைப்பது பிடிக்கவில்லை என்று கூடிய உடனேயே நெட்டிசன்கள் பலரும் இது தொடர்பாக விவாதிக்க ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் புதுக்கோட்டை எம்பி அப்துல்லாவும் இது குறித்து தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். அவர் கூறுகையில், "ஜீ" என்ற வார்த்தை தமிழ் இந்துக்களுக்கு அலர்ஜியோ அது மாதிரி இது தமிழ் முஸ்லீம்களுக்கு "பாய்" என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:- "பாய் என்பது உருது / இந்தி சொல்.. தமிழை தாய் மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்கள் பெரும்பாலும் பாய் என்று விளிக்கப்படுவதை விரும்புவதே இல்லை.. அண்ணே, தம்பி, மாப்ளை, மச்சான் என்று அழைப்பதையே விரும்புவார்கள். சுருக்கமா சொல்லணும்னா எப்படி "ஜீ" என்ற வார்த்தை தமிழ் இந்துக்களுக்கு அலர்ஜியோ அது மாதிரி இது தமிழ் முஸ்லீம்களுக்கு!" என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இந்துக்கள் முஸ்லீம்கள் எபோதும் சகோதரர்கள் மாதிரி பழகி வருகிறார்கள். ஒவ்வொரு ஏரியாக்களை பொறுத்து முஸ்லீம்களை அழைப்பார்கள் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications