தமிழகத்தில் குறையும் பாதிப்பு.. ஏறிய வேகத்தில் இறங்கிய கொரோனா.. கோவையை முந்திய சென்னை!
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 1804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1,917 பேர் ஒரே நாளில் மீண்டனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் மெதுவாக குறைந்து வருகிறது. குணம் அடைபவர்களின் எண்ணிக்கை பாதிப்பவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகி உள்ளது. அதாவது பாதிப்பு முன்பைவிட ஓரளவு குறைந்துள்ளது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 17ம் தேதி நிலவரப்படி கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25,92,436 ஆக உயர்ந்துள்ளது.

தேறியவர்கள்
அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1,917 பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 25,37,632 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஒரே நாளில் 32 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 34,579 ஆக உயர்ந்துள்ளது.

நோயாளிகள் அதிகரிப்பு
தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது தமிழகத்தில் நேற்று 20,370 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த எண்ணிக்கை 20,225 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video

சிகிச்சை எவ்வளவு
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 09 பேரும், கோவையில் 206 பேரும், ஈரோட்டில் 167 பேரும், சேலத்தில் 117 பேரும், செங்கல்பட்டில் 110 பேரும், தஞ்சாவூரில் 121 பேரும், திருப்பூரில் 77 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கோவையில் மட்டும் அதிகமாக 2380 பேர் உள்ளனர். சென்னையில் இந்த எண்ணிக்கை 2076 ஆகவும், ஈரோட்டில் 1864 ஆகவும். செங்கல்பட்டில் 1130 ஆகவும், தஞசாவூரில் 1104 ஆகவும் உள்ளது.
-
Corona: முதல்வர் ஸ்டாலினே கொரோனாவால் போயிருப்பார்! ஆனால்..! எடப்பாடி பழனிசாமி சர்ச்சை பேச்சு! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன












Click it and Unblock the Notifications