டோக்கன் எண் + தேதி.. ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை.. விண்ணப்பத்தை எப்போது கொடுக்க வேண்டும் தெரியுமா?
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் கனவு திட்டமான மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கான டோக்கன் வழங்கும் பணிகள் இன்று தொடங்கி உள்ளன. இந்த டோக்கன்களை எப்போது கொடுக்க வேண்டும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
இதற்காக வழங்கப்படும் விண்ணப்பத்தில் பல்வேறு அடிப்படை விவரங்கள் கேட்கப்பட்டு உள்ளது. அதாவது பெயர், போன் எண், ஆதார் எண், படிப்பு, வருமானம் என்று பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டு உள்ளன. இன்னொரு பக்கம் இதனுடன் டோக்கன் ஒன்று வழங்கப்படுகிறது.

இந்த டோக்கன் மிக முக்கியம் ஆகும். அதில் உங்களிடம் கொடுப்பதும் அப்ளிகேஷனில் நம்பர் இருக்கும். அதோடு சேர்ந்து ஒரு நம்பர் இருக்கும். இதுதான் டோக்கன் நம்பர் ஆகும். மேலும் டோக்கனில் உங்கள் பெயர் இருக்கும்.
பின்னர் நீங்கள் ரேஷன் கடைக்கு அல்லது முகாமிற்கு எந்த நாளில், எந்த நேரம் செல்ல வேண்டும் என்று நேரம் கொடுக்கப்பட்டு இருக்கும். எந்த முகாமிற்கு செல்ல வேண்டும் என்றும் விவரங்கள் இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அந்த முகாமிற்கு குறிப்பிட்ட தேதியில் டோக்கனுடன் செல்ல வேண்டும்.
உடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை எடுத்து செல்ல வேண்டும். அதோடு தேவையான ஆவணங்கள், ஆதார் இணைக்கப்பட்ட போன், ஆதார் கார்டு ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
முகாம்கள்: இந்த டோக்கன்கள் வழங்கப்பட்ட பின் சென்னையில் இதற்காக வரும் 24ம் தேதி முதல் முகாம்கள் தொடங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக 650 ரேஷன் கடைகளில் விண்ணப்பங்கள் மக்களிடம் இருந்து பெறப்பட உள்ளன. முதல் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 4ம் தேதி முடியும். இரண்டாம் கட்ட முகாம் உடனடியாக தொடங்கி ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடக்கும். இரண்டு கட்டமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மக்களிடம் இருந்து பெறப்படும்.
இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் 3 -4 கடைகளுக்கு ஒரு முகாம் என்று 250 முகாம்கள் முதல் கட்டமாக அமைக்கப்படும். அதன்பின் இரண்டு, மூன்று கட்டங்களில் மற்ற ரேஷன் கடைகளுக்கு முகாம்கள் அமைக்கப்படும்.
இந்த முகாம்களில் தினமும் 80 முதல் 100 டோக்கன்கள் கொண்ட மக்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வாங்கப்படும்.
எத்தனை பேர்: மொத்தமாக 17.18 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலும் 10 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து முதல் கட்டமாக 12 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளன. பலர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதால் கூடுதலாக விண்ணப்பங்களை அச்சடிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

யாருக்கெல்லாம் இந்த திட்டத்தின் கீழ் பணம் கிடைக்காது?:
குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சம் மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.
மாநில, மத்திய அரசு ஊழியர்கள்/ பொதுத்துறை நிறுவனங்கள்/ வங்கிகளின் ஊழியர்கள்/ வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள்
ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் தவிர்த்த உள்ளாட்சி பிரதிநிதிகள்
சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்
ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual Turnover) செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்
ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்












Click it and Unblock the Notifications