தமிழகத்தில் மார்ச் 13ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு..ஏப்.6ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - அன்பில் மகேஷ்
சென்னை: 10,11,12 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 2023ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறும், பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 14 ஆம் தேதியும் நடைபெறும் எனவும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டது பள்ளி மாணவர்கள்தான். கடந்த 2019 - 2020, 2020- 2021ஆம் கல்வி ஆண்டுகளில் பள்ளிகள் மூடப்பட்டு பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படவில்லை. மாணவர்கள் ஆல்பாஸ் செய்யப்பட்டனர்.
பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களிலும் மதிப்பெண்கள் தெரிவிக்கப்படாமல் பாஸ் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.

கொரோனா அச்சுறுத்தல்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. அவ்வப்போது கொரோனா அச்சுறுத்தல் எழுந்தாலும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நிச்சயம் பொது தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியாக கூறினார். பள்ளி மாணவர்கள் அனைவரும் கொரோனா தொற்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

நேரடி வகுப்புகள்
கொரோனா தொற்று குறைந்ததையடுத்து தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெற்றன. திருப்புதல் தேர்வுகளும் நடத்தப்பட்டு பின்னர் 2022ஆம் ஆண்டுக்கான 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் முதல் பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. ஜூன் மாதத்தில் ரிசல்ட் அறிவிக்கப்பட்டது. உயர்கல்விக்காக கலந்தாய்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. விரைவில்

2022-2023 ஆம் கல்வி ஆண்டு
2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு காலாண்டு தேர்வுகளும் மாதாந்திர தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளன.

பொதுத்தேர்வு அட்டவணை
இந்நிலையில்,10,11,12 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார். பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்க உள்ளது. ஏப்ரல் 3ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications