தமிழகத்தில் மார்ச் 2 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதியின் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். இதன்படி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் 2 ஆம் தேதி தொடங்குகிறது. மே 8 ஆம் தேதி ரிசல்ட் வெளியிடப்படும். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 8 ஆம் தேதி தொடங்குகிறது என அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் பொதுத் தேர்வு நடைபெறும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு அரசு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி அதை ரத்து செய்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டுமுதல் 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி
எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2க்கு பொதுத் தேர்வுகள் வழக்கம்போல் நடைபெற உள்ளது. பொதுத் தேர்வுகள் மீதான அச்சம் குறையும் விதமாகவும் மாணவர்கள் முன்கூட்டியே தேர்வு தேதியை அறிந்து கொண்டு தேர்வுக்கு தயாராகும் விதமாகவும் தேர்வு தேதிகள் முன்கூட்டியே அறிவிக்கப்படும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இன்று அறிவிக்கப்படுகிறது
அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில் பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதற்கான தேதி இன்று வெளியிடப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுத் தேர்வு அட்டவணை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் பொதுத் தேர்வு கால அட்டவணை தேதி உறுதி செய்யப்பட்டு தேர்வு தேதிகள் வெளியிடப்படும் என்று கடந்த வாரம் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
முன்கூட்டியே தொடங்குகிறதா?
அதன்படி, அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே கூறியபடி இன்று 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 2 ஆம் தேதி தொடங்குகிறது என அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
* தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறும்
* பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் பிப்ரவரி 16 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெறும்.
* மே 8 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியிடப்படும் - அன்பில் மகேஷ்
* தமிழகத்தில் மார்ச் 11 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்.
* கணக்கு பதிவியல் தேர்வுக்கு கால்குலேட்டரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications