TN 10th Result: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு.. 11ம் வகுப்புக்கும் குட்நியூஸ்
சென்னை: பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவு மே 9-ந்தேதி வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஒரு நாள் முன்கூட்டியே அதாவது மே 8-ந்தேதியே வெளியிடப்பட்டது. அதேபோல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவும் முன்கூட்டியே வெளியாகுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல் வெளியானது.இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதன் பின்னர் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28-ல் தொடங்கியது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 15ம் தேதி முடிந்தது. அதன் பின்னர் பொதுத்தேர்வு முடிந்ததும் மாணவர்களின் விடைத்தாள்கள் 118 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கிருந்து திருத்துதல் மையங்களுக்கு ஏப்ரல் 17-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 21 முதல் 30-ம் தேதி வரை விடைத்தாள் திருத்துதல் பணிகள் நடைபெற்றன. தற்போது மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக தேர்வு அட்டவணை வெளியிட்டபோது, மே மாதம் 19-ந்தேதி (திங்கட்கிழமை) 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறையால் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவு மே 9-ந்தேதி வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஒரு நாள் முன்கூட்டியே அதாவது மே 8-ந்தேதியே வெளியிடப்பட்டிருந்ததால், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் முன்கூட்டியே வெளியாகலாம் என எதிர்பார்ப்பு மாணவர்களிடையே எழுந்தது.
இந்த நிலையில் தேர்வு முடிவை வெளியிடுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன், அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் முன்கூட்டியே தேர்வு முடிவை வெளியிடுவது பற்றி முடிவெடுக்கப்பட்டு இருந்தால் இன்றோ (புதன்கிழமை) அல்லது நாளையோ (வியாழக்கிழமை) இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் மே 16ல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் மே 16 பிற்பகலில் வெளியிடப்படும் என்றும் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்












Click it and Unblock the Notifications