Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் இன்று 1,612 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 28 பேர் மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி மாலை நிலவரப்படி ஒரே நாளில் 1,612 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1,626 பேர் ஒரே நாளில் மீண்டனர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று 17,192 ஆக இருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 17,150 ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மே இரண்டாவது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் தினசரி பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது 1,612 என்கிற நிலையில் உள்ளது. கோவை, ஈரோடு, சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் பாதிப்பு குறைந்து வருகிறது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதியான இன்று கொரோனா தொற்றால் 1,612 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவரகளின் எண்ணிக்கை 26,63,789 ஆக உயர்ந்துள்ளது.

எவ்வளவு

எவ்வளவு

அதேநேரம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,626 பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 26,11,061 ஆக உயர்ந்துள்ளது.

 உயிரிழப்பு எவ்வளவு

உயிரிழப்பு எவ்வளவு

தமிழகத்தில் கொரோனா காரணமாக செப்டம்பர் 30 ம் தேதி மாலை நிலவரப்படி 28 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 35,578 ஆக உயர்ந்துள்ளது.

சரிந்தது

சரிந்தது

தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 17 ஆயிரம் ஆக உள்ளது . தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று 17,192 ஆக இருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 17,150 ஆக குறைந்துள்ளது. அதாவது நேற்றைவிட இன்று ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கோவையில் எவ்வளவு

கோவையில் எவ்வளவு

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 183 பேரும், கோவையில் 176 பேரும், செங்கல்பட்டில் 112 பேரும், ஈரோட்டில் 109 பேரும், திருப்பூரில் 84 பேரும், சேலத்தில் 60 பேரும், திருவள்ளூரில் 68 பேரும், தஞ்சாவூரில் 98 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கோவையில் 2038 ஆகவும், சென்னையில் 1970 ஆகவும், ஈரோட்டில் 1182 ஆகவும், செங்கல்பட்டில் 1096 ஆகவும் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+