Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் கூட இல்லை. இந்த நிலையில்.. சமீபத்தில் வெளியான லோக் போல், போல் டிராக்கர், ABP news, மற்றும் அக்னி நியூஸ் சர்வீசஸ் ஆகிய மூன்று முக்கிய சர்வே முடிவுகள், அரசியல் களத்தில் ஒரு 'பகீர்' கிளப்பியிருக்கின்றன.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர், சசிகலா- ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது. வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 172 முதல் 179 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என ஏபிபி சர்வே கணித்துள்ளது. அதிமுக கூட்டணிக்கு அதிர்ச்சி தரும் வகையிலான இடங்களே கிடைக்கும் என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் ஹைலைட் என்னவென்றால், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வாங்கும் வாக்கு சதவீதம் ஒருபுறம் ஆச்சரியப்படுத்தினாலும், மறுபுறம் அந்தக் கட்சிக்கு ஒரு கசப்பான உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறது.

Tamil Nadu 2026 Election

அசைக்க முடியாத ஸ்டாலின்... அசுர பலத்தில் திமுக!

தமிழக மக்களின் சாய்சை இந்த சர்வே ஆராய்ந்ததில், தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீதான நம்பிக்கை இன்னும் குறையவில்லை என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. 42 சதவீத மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், 'முதல்வர்' ரேசில் அவரே முதலிடத்தில் அமர்ந்திருக்கிறார்.

கூட்டணி பலத்தைப் பொறுத்தவரை, திமுக தலைமையிலான படை 40 முதல் 42 சதவீத வாக்குகளை வாரிச் சுருட்டும் எனத் தெரிகிறது. இது வெறும் வாக்கு சதவீதம் மட்டுமல்ல, கிட்டதட்ட 172 முதல் 179 தொகுதிகள் வரை அந்தப் பக்கம் சாய்வது கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம், அறிவாலயம் மீண்டும் ஒருமுறை அரியணையில் அமர்வது கிட்டத்தட்ட 'கன்பார்ம்' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

சறுக்குகிறாரா விஜய்? தவெக-வின் நிலை என்ன?

சினிமா திரையில் 'வசூல் சக்ரவர்த்தி'யாக வலம் வரும் விஜய்க்கு, அரசியல் தளம் சற்றே சவாலானதாகவே மாறியிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் (TVK) 18 முதல் 20 சதவீத வாக்குகளைப் பெற்று கவனத்தை ஈர்த்தாலும், அவை வெற்றியாக மாறுமா என்பது சந்தேகமே. வெறும் 4 முதல் 6 தொகுதிகளில் மட்டுமே தவெக முந்த வாய்ப்புள்ளதாகக் கணிப்புகள் கூறுகின்றன.

முதலமைச்சர் வேட்பாளர் ரேஸில் விஜய் 24 சதவீத ஆதரவைப் பெற்றிருந்தாலும், பலமான வாக்கு வங்கியாக அது மாறாதது கட்சித் தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் கிளம்பிய 'ஹைப்' இப்போது வாக்குகளாக மாறாமல் போனது ஏன் என்ற விவாதம் இப்போதே ஆரம்பமாகிவிட்டது.

எடப்பாடியின் எகிறும் கிராஃப்... சீமான் நிலவரம்!

மறுபுறம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி சைலண்டாகத் தனது பலத்தை நிரூபித்து வருகிறது. 32 முதல் 35 சதவீத வாக்குகளுடன், 50 முதல் 58 தொகுதிகள் வரை தட்டிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு 30 சதவீத மக்கள் முதலமைச்சர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மற்றொரு முக்கிய சக்தியான சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சும் போலிருக்கிறது. 4 முதல் 6 சதவீத வாக்குகளைப் பெற்றாலும், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை (0 சீட்கள்) என்பதே தற்போதைய கள நிலவரம்.

விஜய்யின் அரசியல் என்ட்ரி அதிர்வலைகளை ஏற்படுத்தினாலும், ஸ்டாலின் எனும் 'இமேஜை' வீழ்த்த அது போதுமானதாக இல்லை என்பதே தற்போதைய நிலவரம். கோட்டை நோக்கிச் செல்லும் ஓட்டத்தில் திமுக முன்னிலையில் இருப்பது ஆணித்தரமாகத் தெரிகிறது.

திமுக: ஹேட்ரிக் கனவு... நிஜமாகிறதா?

லோக் போல், போல் டிராக்கர், மற்றும் அக்னி நியூஸ் சர்வீசஸ் சர்வே முடிவுகளின்படி, ஆளுங்கட்சியான திமுக அசுர பலத்துடன் வலம் வருகிறது. லோக் போல் 181-189 இடங்களையும், அக்னி நியூஸ் 180 இடங்களையும் வாரி வழங்கியுள்ளன. குறிப்பாக, கொங்கு மற்றும் வடக்கு மாவட்டங்கள் என அதிமுகவின் கோட்டைகளாகக் கருதப்பட்ட இடங்களிலும் உதயசூரியன் உக்கிரமாகத் தெரிவது எடப்பாடி தரப்பை அப்செட் ஆக்கியுள்ளது.

விஜய்யின் 'தவெக': வாக்குகள் பிளஸ்... தொகுதிகள் மைனஸ்!

விஜய்யின் அரசியல் வருகை தமிழக அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த மூன்று சர்வேக்களும் சுட்டிக்காட்டும் ஒரு அபாய மணி - 'வாக்கு சிதறல்'.

வாக்கு சதவீதம்: லோக் போல் 23.9% மற்றும் போல் டிராக்கர் 19.2% என தவெக-விற்கு கணிசமான வாக்குகளை ஒதுக்கியுள்ளன.

நிதர்சனம்: சுமார் 20 சதவீத வாக்குகளைப் பெற்றாலும், அவை சீட்டுகளாக மாறாமல் 10-க்கும் குறைவான தொகுதிகளிலேயே முடிந்துவிடும் என்கின்றன புள்ளிவிவரங்கள்.

டெபாசிட் காலியாகும் அபாயம்?

அரசியல் சதுரங்கத்தில் ஒரு கட்சி 20% வாக்குகளை ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அது தொகுதிவாரியாகப் பரவலாகச் சிதறும்போது வெற்றி என்பது எட்டாக்கனியாகிவிடும்.

"ஒரு தொகுதியில் வெற்றி பெற அல்லது டெபாசிட்டைத் தக்கவைக்கத் தேவையான குறிப்பிட்ட வாக்கு வங்கியை (Concentrated Vote Bank) தவெக இன்னும் உருவாக்கவில்லை. பல தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுகவின் ஓட்டு வங்கியைப் பிரிக்கும் 'ஓட்டு வெட்டி' (Vote Splitter) வேலையை மட்டுமே தவெக செய்யும் சூழல் தெரிகிறது. இதனால், பல இடங்களில் விஜய்யின் வேட்பாளர்கள் டெபாசிட் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்கிறார்கள் விவரம் அறிந்த உடன்பிறப்புகளும் ரத்தத்தின் ரத்தங்களும்.

மூன்றாம் இடத்திற்குப் போட்டியா?

அக்னி நியூஸ் கணிப்பின்படி தவெக 9.7% வாக்குகளை மட்டுமே பெறும் என்று சொல்லப்பட்டிருப்பது, விஜய் தரப்புக்கு இன்னும் ஒரு பெரிய சவால் காத்திருப்பதை உணர்த்துகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி 5.1% வாக்குகளுடன் தன் பாதையில் உறுதியாக இருக்க, விஜய் மற்றும் எடப்பாடி இடையேதான் 'யார் எதிர்க்கட்சி?' என்ற கடும் போட்டி நிலவும் போலிருக்கிறது. இதில் கவனிக்க வேண்டியது விஜய் மொத்தமாகவே இவ்வளவுதான் வாக்குகளை வாங்குகிறார் என்றால்.. தவெக டெபாசிட் இழக்க கூட வாய்ப்புகள் உள்ளன. 100 தொகுதிக்கும் மேல் தவெக டெபாசிட் இழக்க வாய்ப்புகள் உள்ளன.

இப்போதைய நிலவரப்படி, 'ஸ்டாலின் மீண்டும் முதல்வர்' என்பது ஒரு பக்கம் இருந்தாலும், விஜய்யின் அரசியல் அறிமுகம் 'மாஸாக' இருக்குமா அல்லது 'டெபாசிட்' காலியாகும் 'மிஸ்ஸாக' இருக்குமா என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+