Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2016ல் மநகூ.. 2026ல் தநகூ? விஜய் தலைமையில் தமிழக நலக் கூட்டணி? பாஜக-திமுகவுக்கு தான் லாபமே! எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் மாற்றத்திற்கான சூழல்கள் தென்படத் தொடங்கி இருக்கின்றன. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக - அதிமுக கூட்டணிகள் தவிர்த்து மூன்றாவது கூட்டணி களமிறங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட தொடங்கியுள்ளன. விஜய் தலைமையில் மூன்றாவது அணி அமையலாம் என சொல்லப்படும் நிலையில், 2016இல் மக்கள் நல கூட்டணி போல, 2026இல் தமிழக நலக் கூட்டணி களமிறங்களாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள், இது ஒரு புறம் இருக்க இந்த கூட்டணி களமிறங்கினால் அது பாஜகவுக்கும் திமுகவுக்கும் தான் சாதகமாக இருக்கும் என்கின்றார் அரசியல் பார்வையாளர்கள்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் கூட்டணி பேச்சு வார்த்தைகளை தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. திமுக கூட்டணி வழக்கம்போல் பல மாதங்களுக்கு முன்னரே, ஏன் சில வருடங்களுக்கு முன்பே தொடங்கி விட்டது என சொல்லலாம்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பூத் கமிட்டி ஏஜென்ட் ஆலோசனை கூட்டம், தேர்தல் ஒருங்கிணைப்பு குழு என திமுக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பெரும்பாலும் வரும் தேர்தலில் தொடரும் எனவே எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay DMK BJP

தமிழக தேர்தல்

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி மட்டும் விஜயை காரணம் காட்டி கூடுதல் தொகுதிகளை எதிர்பார்ப்பதாக சொல்லப்படுகிறது. காங்கிரசின் முக்கிய தலைவர்கள் விஜயுடன் கூட்டணி என்பதை மறுத்தாலும், இரண்டாம் கட்ட தலைவர்கள் விஜயுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவே சொல்கின்றனர். மறுபுறம் அதிமுக பாஜக கூட்டணி திணறி வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை எதிர் கொள்ள அசுர கூட்டணி பல தேவை. ஆனால் அதிமுகவிடம் அது இல்லை. தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் இன்னும் கூட்டணி இறுதியாகவில்லை.

அதிமுக கூட்டணி

ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவற்றிடம் பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை. இதனால் பாமக தேமுதிக கூட்டணிக்கு வந்தால் மட்டுமே அந்த கட்சி வெற்றி பெற முடியும் என்ற சூழல் நிலவுகிறது. நாம் தமிழர் கட்சி சீமான் பற்றி சொல்லத் தேவையில்லை. தனித்து தான் போட்டி என்று சொல்லிவிட்டார். ஒரு சதவீதத்தில் ஆரம்பித்து தற்போது எட்டு சதவீதம் வரை அந்த கட்சியின் வாக்கு வங்கி உயர்ந்திருக்கிறது. அதுவும் தனித்துப் போட்டியிட்டு என்பதை கவனிக்க வேண்டும். இந்த தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் சீமான் தனித்து வேட்பாளர்களை களம் இறக்குகிறார்.

சீமான் வாக்குகள்

இந்த தேர்தலில் எட்டிலிருந்து பத்து சதவீதம் வரை சீமானுக்கு வாக்கு வங்கி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாக்கு யாரை பாதிக்கும் அல்லது யாருக்கு பிரிந்து செல்லும் என்பது நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தை பொறுத்தே இருக்கிறது. கடந்த ஆண்டு கட்சியை ஆரம்பித்த விஜய் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் தேர்தலை சந்திக்க இருக்கிறார். விஜய் கட்சி ஆரம்பித்த புதிதில் அவரது அரசியலில் பல குழப்பங்கள் இருந்தது. இதனால் யாரும் அவரை தேடிச் செல்லாத நிலை இருந்தது.

செங்கோட்டையன்

கரூர் சம்பவத்துக்கு பின் ஓரளவு அரசியல் குறித்த புரிதல் விஜய்க்கு ஏற்பட்டிருக்கிறது. மேலும் செங்கோட்டையன் அந்த கட்சியில் இணைந்த பிறகு சில மாற்றங்கள் தென்பட துவங்கி இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் பேசி வரும் நிலையில் விஜயுடன் கூட்டணி அமைக்க செங்கோட்டையில் பேச்சுவார்த்தையை துவக்குவார் என சொல்லப்படுகிறது. தற்போது இருக்கும் காங்கிரஸ், பாமக, தேமுதிக, தொடங்கி விடுதலை சிறுத்தைகள் வரை அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீடு வரை சென்றவர் செங்கோட்டையன் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

விஜய் 3வது அணி

அது மட்டும் அல்லாமல் ஏற்கனவே அதிமுகவில் இருந்தும் பாஜக கூட்டணியில் இருந்தும் வெளிவந்திருக்கும் டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரும் தனித்தனி அணியாக இந்த தேர்தலை சந்திக்க இருக்கிறார்கள். ஒருவேளை விஜய் தரப்பில் இவர்களெல்லாம் சேர்ந்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கினால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என பார்க்கும்போது அது திமுக பாஜகவுக்கு தான் சாதகம் என்கின்றனர். ஒருவேளை விஜய் உடன் பாமக, தேமுதிக, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் சேர்ந்தால் வடமாவட்டங்களில் வன்னியர் வாக்குகள் பெரும்பாலும் விஜய் தரப்புக்கு செல்லும்.

திமுக கூட்டணி

செங்கோட்டையின் மூலம் அதிமுகவின் கொங்கு மண்டல வாக்குகளும், ஓபிஎஸ் -டிடிவி தினகரன் மூலம் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளும் விஜய்க்கு செல்லும். இந்த மூன்று பகுதிகளிலும் குறிப்பாக கொங்கு, தென்மாவட்டங்களில் அதிமுக வலுவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஆட்சிக்கு எதிரான வாக்குகள் அதிமுக ஆதரவு வாக்குகளை விஜய் கூட்டணி பிரித்து விட்டால் அது திமுகவுக்கு சாதகமாக அமையும்.

பாஜகவுக்கு சாதகம்

அதெல்லாம் சரி பாஜகவுக்கு எப்படி சாதகம் என ஒரு கேள்வி எழுகிறது அல்லவா? உண்மையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும் சக்தி வாய்ந்த எதிர்க்கட்சியாக வரவேண்டும் என்பதுதான் பாஜகவின் எண்ணம். அதற்கு இடையில் நிற்பது அதிமுக மட்டுமே. ஒருவேளை இந்த தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தால் எடப்பாடி பழனிச்சாமி நெருக்கடிக்குள்ளாவார். அதிமுகவின் வாக்கு வங்கியும் செல்வாக்கும் சரியும். அப்போது பாஜக அந்த இடத்தை பிடித்து விடலாம் என்பதுதான் பாஜகவின் எண்ணம். இப்படி ஒரு வேலை விஜய் தலைமையில் மூன்றாவது கூட்டணி அமைந்தால் அது திமுகவுக்கும் பாஜகவுக்கும் சாதகமாக அமையும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+