தமிழகத்தில் 486 பேருக்கு இன்று கொரோனா உறுதி - 491 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று மேலும் 486 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 491 பேர் குணமடைந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 486 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,51,063 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 491 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மொத்தம் 8,34,534 பேர் மீண்டுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் மேலும் 486 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,51,063 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 491 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,34,534 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் தற்போது 4,036 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tamil Nadu 486 people were affected by the corona today - 491 Discharged

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,14,232 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 281 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,36,796 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 205 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 35 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,493 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 3 பேரும் தனியார் மருத்துவமனையில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 1,74,28,757 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 52,628 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 257 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+