தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா.. 3550 பேருக்கு ஒட்டுமொத்தமாக பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதுவரை இல்லாத அளவாக, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3550 ஆக கடந்துள்ளது.

Recommended Video

    இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா ஏன்.. சுகாதாரத் துறை விளக்கம்

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிக அதிகமாகி வருகிறது. நேற்று 266 பேருக்கு பரவிய நிலையில் இன்று ஒரே நாளில 527 பேருக்கு ஏற்பட்டுள்ளது.
    இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3550 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 527பேரில் 377பேர் ஆண்கள், 150 பேர் பெண்கள் ஆவர்.

    தமிழகத்தில் இன்று 12773 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் 527 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றுவரை 153489 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 153489 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3550 பேரில் 2392 பேர் ஆண்கள் ஆவர். 1157 பேர் பெண்கள் ஆவர். ஒருவர் திருநங்கை ஆவார்.

    2017 பேர் சிகிச்சை

    2017 பேர் சிகிச்சை

    தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 30 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1409 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் சதவீதம் 39.7 சதவீதம் ஆகும். தமிழகத்தில் தற்போது மருத்துவமனையில் 2017 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    31 ஆக உயர்வு

    31 ஆக உயர்வு

    தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி ஒருவர் கொரானாவால் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு சதவீதம் என்பது மொத்த பாதிப்பில் ஒரு சதவீதத்திற்கும் கீழ் உள்ளது. இன்று உயிரிழந்த மற்றொரு நபருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையிர்ல கொரோனா இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

    அரியலூரில் பரிசோதனை மையம்

    அரியலூரில் பரிசோதனை மையம்

    தமிழகத்தில் தற்போதைய நிலையில் 36 அரசுமருத்துவமனைகள் உள்பட 50 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன தமிழகத்தில் கடைசியாக அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பரிசோதிக்கப்பட்ட 862 சாம்பிள்கள் தற்போது ஆய்வில் உள்ளது. 158558 சாம்பிள்கள் நெகட்டிவ் என வந்துள்ளது

    எங்கு அதிக பாதிப்பு

    எங்கு அதிக பாதிப்பு

    சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து சொந்த ஊர் சென்றவர்கள் மூலம் அதிக அளவு கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு இருமடங்கு ஆகி உள்ளது. சென்னையில் 266 பேருக்கும், கடலூரில் 122 பேருக்கும், விழுப்புரத்தில் 49 பேருக்கும், திருவண்ணாமலையில் 11 பேருக்கும், திண்டுக்கல்லில் 10 பேருக்கும், பெரம்பலூரில் 25 பேருக்கும், அரியலூரில் 6 பேருக்கும், திருவண்ணாமலையில் 11 பேருக்கும் கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+