தமிழ்நாட்டின் முக்கிய ரயில்களில் ஏசி பெட்டிகள் அதிகரிப்பு..அன்-ரிசர்வ் பெட்டிகளும் குறைப்பு..லிஸ்ட்
சென்னை: தமிழ்நாட்டிலிருந்து செல்லும் 7 முக்கிய ரயில்களில் 2-ம் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த ரயில்களில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்பதற்கான லிஸ்ட்டினை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
தென்னக ரயில்வேயை பொறுத்தவரை மிகப்பெரிய நெட்வொர்க் ஆக செயல்பட்டு வருகிறது.. கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.
வாழ்க்கை தரம்: மக்களின் வாழ்க்கை தரத்துக்கு ஏற்றார்போல், ரயில்களில் ஏசி பெட்டி, 2ம் வகுப்பு, ரிசர்வேஷன் பெட்டி, முன்பதிவில்லா பெட்டி என இருக்கிறது. இந்நிலையில், நீண்டதூரம் பயணிக்கும் ரயில்களில் வருவாயை அதிகளவு ஈட்டும் நோக்கில், ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் யோசித்து வருகிறது.. இதற்காகலே 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையையும் குறைக்க முடிவு செய்துள்ளனர்.

முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளை குறைத்துவிட்டு, மூன்றடுக்கு ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிட்டு வருகின்றனர்.
ரயில்வே நிர்வாகம்: இப்படிப்பட்ட சூழலில்தான், தெற்கு ரயில்வே நிர்வாகம், தமிழ்நாடு, கேரளாவில் இருந்து நீண்டதூரத்திற்கு இயங்கும் 8 முக்கிய ரயில்களில் 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் குறைக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஏசி பெட்டிகள் இணைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த லிஸ்ட் இதுதான்:
மன்னார்குடி-பகத் கி கோதி எக்ஸ்பிரசில் (22674, 22673) வரும் 24ம் தேதி முதல் 3 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியும், ஒரு முன்பதிவில்லா பெட்டியும் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக இரண்டடுக்கு ஏசி பெட்டி-1, மூன்றடுக்கு ஏசி பெட்டி-3 இணைக்கப்படுகிறது. ராமேஸ்வரம்-ஓஹா எக்ஸ்பிரசில் (16733, 16734) வரும் 28ம் தேதி முதல் 5 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியும், ஒரு முன்பதிவில்லா பெட்டியும் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக 6 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம்-மங்களூரு எக்ஸ்பிரசில் (16347, 16348) வரும் 25ம் தேதி முதல் ஒரு முன்பதிவில்லா பெட்டி நீக்கப்பட்டு, ஒரு மூன்றடுக்கு ஏசி பெட்டியும், மங்களூரு-லோக்மான்யதிலக் எக்ஸ்பிரசில் (12620, 12619) வரும் 26ம் தேதி முதல் ஒரு முன்பதிவில்லா பெட்டி நீக்கப்பட்டு, ஒரு மூன்றடுக்கு ஏசி பெட்டியும் இணைக்கப்படுகிறது.
கோவை-ராஜ்கோட் எக்ஸ்பிரசில் (16614, 16613) வரும் 30ம் தேதி முதல் 4 இரண்டாம் வகுப்பு பெட்டி நீக்கப்பட்டு, 4 மூன்றடுக்கு ஏசி பெட்டியும், கோவை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரசில் (16618, 16617) ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 4 இரண்டாம் வகுப்பு பெட்டி நீக்கப்பட்டு, 4 மூன்றடுக்கு ஏசி பெட்டியும், சென்னை எழும்பூர்-ஜோத்பூர் எக்ஸ்பிரசில் (22663, 22664) வரும் 29ம் தேதி முதல் 5 இரண்டாம் வகுப்பு பெட்டியும், ஒரு முன்பதிவில்லா பெட்டியும் நீக்கப்பட்டு, 6 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
அறிவிப்பு: சென்னை எழும்பூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரசில் (12667, 12668) வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 5 இரண்டாம் வகுப்பு பெட்டியும், ஒரு முன்பதிவில்லா பெட்டியும் நீக்கப்பட்டு, 6 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் இணைக்கப்படுகிறது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கோரிக்கை: இந்த அறிவிப்பினால், நடுத்தர மக்கள் கடுமையாக அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. அப்படியானால் மூன்றடுக்கு ஏசி பெட்டியில்தான் பயணிக்க வேண்டுமா? இது சாதாரண கட்டணத்தில் இருந்து 3 மடங்கு அதிகமாகிறதே? என்று கலங்குகிறார்கள்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications