சென்னை: தமிழக சட்டசபையில் விவசாயத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தால் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான முழு பொது பட்ஜெட் நேற்று தாக்கலானது. அந்த வகையில் இன்று இரண்டாவது ஆண்டாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
வேளாண் துறைக்கான தனி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா, ஆந்திரத்திற்கு அடுத்த 3ஆவது மாநிலமாக தமிழகத்தில் வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கலாகிறது.
Mar 19, 2022, 12:19 pm IST
“இது விவசாயிகளை ஏமாற்றும் அறிக்கை” - இபிஎஸ்
Mar 19, 2022, 12:18 pm IST
மொத்த காய்கறி விற்பனை மையம் அமைக்கப்படும்!
Mar 19, 2022, 12:07 pm IST
நகைக்கடன் தள்ளுபடியில் 35 லட்சம் பேர் பாதிப்பு - இபிஎஸ்
திமுக தேர்தல் அறிக்கையை நம்பிய மக்கள் ஏமாற்றம் - இபிஎஸ்
தேர்தல் அறிக்கையில் கூறியது போல திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - இபிஎஸ்
Mar 19, 2022, 12:07 pm IST
மலர் சாகுபடியை அதிகரிக்க திட்டம்!
Mar 19, 2022, 12:05 pm IST
மழையால் நெல் மணிகள் முளைத்து விவசாயிகள் பாதிப்பு - இபிஎஸ் குற்றச்சாட்டு
வேளாண் பட்ஜெட் பற்றி எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை - இபிஎஸ்
கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகள் மழையில் நனைந்து அரசுக்கும் நஷ்டம் - இபிஎஸ்
Mar 19, 2022, 12:03 pm IST
மீன் வளர்ப்பு - நிதி ஒதுக்கீடு!
Mar 19, 2022, 11:57 am IST
தேனீ வளர்ப்பு - நிதி ஒதுக்கீடு!
Mar 19, 2022, 11:53 am IST
ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நன்றி சொல்லி வேளாண் பட்ஜெட் உரையை முடித்தார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்
வாழ்க தமிழகம் வளர்க் வேளாண்மை என்று கூறி பட்ஜெட்டை நிறைவு செய்தார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்
Mar 19, 2022, 11:53 am IST
“இனி போனிலேயே பம்பு செட்டுகளை இயக்கலாம்”
Mar 19, 2022, 11:51 am IST
விளை பொருட்களுக்கு ஏற்ற விலை
தொலையுணர்தல் தொழில்நுட்பம் மூலம் நிலஉடைமை ,பருவம் வாரியாக பயிர்களின் சாகுபடிப் பரப்பு, வேளாண் சந்தை நுண்ணறிவுப் பிரிவின் மூலம் விலை கணிக்கப்பட்டு, விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்படும்.
Mar 19, 2022, 11:49 am IST
புறநானூற்றில் பருத்தியை வேலியாக உடைய ஊர்களைப் புலவர்கள் பாராட்டியுள்ளனர்
பருத்தியின் உற்பத்தியை உயர்த்திட நீடித்த நிலையான பருத்தி இயக்கம்
ரூ. 15.32 கோடி செலவில் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்
இயற்கை முறை பருத்தி சாகுபடியும் ஊக்குவிக்கப்படும்.
Mar 19, 2022, 11:48 am IST
ஆறு வேளாண் கருவிகள் அடங்கிய வேளாண் கருவிகள் தொகுப்பு வழங்கப்படும் - வேளாண் அமைச்சர்
நெல் அறுவடைக்குப்பின், பயறுவகைகள் சாகுபடியினை ஊக்கப்படுத்த ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
மூலம் கூடுதலாக 13 ஆயிரம் மெட்ரிக் டன் பயறு உற்பத்தி செய்யப்படும் - வேளாண் அமைச்சர்
Mar 19, 2022, 11:43 am IST
மலர் சாகுபடியை அதிகரிக்கத் திட்டம்
மல்லிகை சாகுபடியில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது
தமிழ்நாட்டில் 4,250 ஏக்கராக மலர் சாகுபடியை அதிகரிக்கத் திட்டம்
மல்லிகை, சம்பங்கி, செவ்வந்தி, ரோஜா ஆகிய மலர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.5.37 கோடி
Mar 19, 2022, 11:42 am IST
பனை ஏறும் இயந்திரம் : விருது வழங்கப்படும்!
Mar 19, 2022, 11:35 am IST
உள்நாட்டு மீன் வளர்ப்பு பாதுகாப்புக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர்
10 அணைகளில் மீன் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் - வேளாண் அமைச்சர்
நாகை மாவட்டத்தில் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணை ஏற்படுத்தப்படும் - வேளாண் அமைச்சர்
Mar 19, 2022, 11:34 am IST
இலவச தென்னங்கன்று வழங்க திட்டம்!
Mar 19, 2022, 11:34 am IST
கேரள தோட்டக்கலை தமிழகத்தில் நேரடி கொள்முதல் செய்ய நடவடிக்கை - வேளாண் அமைச்சர்
தேனி, கோவையில் மொத்த காய்கனி மையம் அமைக்கப்படும் - வேளாண் அமைச்சர்
Mar 19, 2022, 11:33 am IST
38 கிராமங்களில் மதிப்புக்கூட்டம் சந்தைப்படுத்துதல் மையங்கள் அமைக்க ரூ.95 கோடி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர்
கருப்பட்டி மதிப்பு சார்ந்த பனை பொருட்கள் உற்பத்திக்கு 75 சதவிகிதம் மானிய உதவி - வேளாண் அமைச்சர்
Mar 19, 2022, 11:30 am IST
தடுப்பணைகள், ஏரிகள் புனரமைக்கப்படும் - வேளாண் அமைச்சர்
வாய்க்கால் தூர்வார ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர்
அயிரை, கெண்டை உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு
Mar 19, 2022, 11:29 am IST
இயந்திரங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு!
Mar 19, 2022, 11:26 am IST
பம்பு செட்டுகளை தொலைவில் இருந்தே இயக்கும் கருவிகளை வாங்க ரூ. 5000 மானியம் - வேளாண் அமைச்சர்
இரவு நேரங்களில் விவசாயிகள் பாம்புக்கடியில் இருந்து தப்பிக்க இந்த திட்டம் உதவும் - வேளாண் அமைச்சர்
திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் தொழிற்பேட்டை ஏற்படுத்தப்படும் - வேளாண் அமைச்சர்
Mar 19, 2022, 11:25 am IST
வேளாண் பட்ஜெட்: அமைச்சர் அறிவிப்பு!
Mar 19, 2022, 11:25 am IST
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்!
Mar 19, 2022, 11:21 am IST
விலை நிலங்களில் ட்ரோன் மூலம் பூச்சிமருந்துகள் தெளிக்க நடவடிக்கை - வேளாண் அமைச்சர்
திட்டங்களில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க படிப்படியாக கணினி வழியே பதிவேற்றம் - வேளாண் அமைச்சர்
Mar 19, 2022, 11:18 am IST
கிராமப்புற வேளாண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க நடவடிக்கை - வேளாண் அமைச்சர்
ரூ.5 லட்சம் 50 பயனாளிகளுக்கு நிதி உதவியாக வழங்கப்படும் - வேளாண் அமைச்சர்
Mar 19, 2022, 11:17 am IST
மூலகை தோட்டங்கள் வளர்க்க நடவடிக்கை!
Mar 19, 2022, 11:16 am IST
இடுபொருள் மற்றும் விதைகள் ஆன்லைனில் பதிவு செய்து விற்பனை செய்யப்படும் - வேளாண் அமைச்சர்
மாலை நேரத்திலும் உழவர் சந்தைகள் செயல்பட நடவடிக்கை - வேளாண் அமைச்சர்
உழவர் சந்தைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை - வேளாண் அமைச்சர்
பூச்சித்தாக்குதல் மற்றும் நோய் மேலாண்மைக்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர்
Mar 19, 2022, 11:13 am IST
ரூ.300 கோடியில் கிராமங்களில் வீடுகளுக்கு இலவச தென்னங்கன்று வழங்கும் திட்டம் - வேளாண் அமைச்சர்
நாலடியாரை மேற்கோள் காட்டி அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட் உரையை வாசித்தார்
Mar 19, 2022, 11:13 am IST
டிஜிட்டல் விவசாயம் அறிமுகம்!
Mar 19, 2022, 11:12 am IST
தமிழகத்தில் 10 உழவர் சந்தைகள் பத்து கோடியில் அமைக்கப்படும்
கிராமங்களில் வீடுகளுக்கு இலவச தென்னங்கன்று வழங்க ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
READ MORE
7:41 AM, 19 Mar
தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்
வேளாண் துறைக்கான தனி பட்ஜெ்டை தாக்கல் செய்கிறார் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்
வேளாண் துறைக்கான முழு பட்ஜெட் இன்று தாக்கலாகிறது
7:41 AM, 19 Mar
தமிழகத்தில் இரண்டாவது முறையாக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கலாகிறது
நேற்றைய தினம் தமிழகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கலானது
7:41 AM, 19 Mar
கர்நாடகா, ஆந்திராவுக்கு அடுத்து தமிழகத்திலும் வேளாண் துறைக்கென தனி பட்ஜெட்
வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கலாகிறது
7:57 AM, 19 Mar
தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கலாகிறது
சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது
21, 22, 23 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது
கடைசி நாளான 24 ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு முதல்வர் பதிலளிக்கிறார்
8:23 AM, 19 Mar
கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் அஞ்சலி
சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்
8:23 AM, 19 Mar
2வது முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்
9:11 AM, 19 Mar
ஒரு டன் கரும்புக்கு ரூ 4 ஆயிரம் நிர்ணயிக்கப்படுமா- விவசாயிகள் எதிர்பார்ப்பு
இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிலையில் கரும்பு விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்
9:18 AM, 19 Mar
புதிய வேளாண் மற்றும் தோட்டக் கலைக் கல்லூரி அமைக்கப்படுமா- வேளாண் பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு
இயற்கை விவசாயத்திற்கு மானியம் வழங்கவும் விவசாயிகள் கோரிக்கையாக இருக்கிறது
9:54 AM, 19 Mar
தமிழக சட்டசபையில் இன்னும் சற்று நேரத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல்
தமிழக சட்டசபையில் காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட் தாக்கலாகிறது
வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார்
10:03 AM, 19 Mar
தமிழக சட்டசபை கூடியது
10:03 AM, 19 Mar
உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்
வேளாண் பட்ஜெட்டை சட்டசபையில் வாசிக்கிறார் எம்ஆர்கே பன்னீர் செல்வம்
10:06 AM, 19 Mar
தமிழகத்தில் வேளாண்மைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது
2வது ஆண்டாக தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது
10:07 AM, 19 Mar
வேளாண்மையை உச்சத்திற்கு அழைத்துச்செல்ல இந்த நிலை அறிக்கையின் திட்டங்கள் உதவும் - எம்ஆர்கே பன்னீர் செல்வம்
10:07 AM, 19 Mar
வேளாண் பட்ஜெட் கடந்த ஆண்டு குழந்தை இந்த ஆண்டு நடந்து அடுத்த ஆண்டுகளில் ஓடும் - உழவர் அமைச்சர்
10:09 AM, 19 Mar
கடந்த ஆண்டு 86 அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டது - வேளாண் அமைச்சர்
10:12 AM, 19 Mar
உழைக்கும் மக்களின் திறனை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - வேளாண் அமைச்சர்
தார்பாய்கள் வாங்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டது - வேளாண் அமைச்சர்
விவசாயிகளிடையே தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் - வேளாண் அமைச்சர்
10:14 AM, 19 Mar
காலநிலை மாற்றத்தால் வேளாண் உற்பத்தி பாதிக்கும் என அறிவிப்பு - வேளாண் அமைச்சர்
உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தாக்கம் உணரப்படுகிறது - வேளாண் அமைச்சர்
தமிழகத்தில் பாதிப்புகளை குறைக்க நடவடிக்கை - வேளாண் அமைச்சர்
சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை - வேளாண் அமைச்சர்
10:15 AM, 19 Mar
கால நிலை மாற்றத்தால் பாதிப்பு
பருவநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளதால் காலநிலை மாற்றத்தை தாங்கி வளரக்கூடிய விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை, சிறுதானியம், எண்ணெய் வித்துக்களை விளைவிக்க நடவடிக்கை.
10:16 AM, 19 Mar
வேளாண் இடுபொருள்கள் மானிய விளையில் வழங்கப்படும் - வேளாண் அமைச்சர்
பயிர்காப்பீடு இழப்பீடு தொகை ரூ. 2029 கோடி 9 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது
10:18 AM, 19 Mar
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க நடவடிக்கை - வேளாண் அமைச்சர்
நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது - வேளாண் அமைச்சர்
பசுந்தாள், மண்புழு உரம் தயாரிப்போருக்கு நிதி உதவி வழங்கப்படும் - வேளாண் அமைச்சர்
10:20 AM, 19 Mar
60 ஆயிரம் விவசாயிகளுக்கு தார்பாய்கள் வழங்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர்
10:20 AM, 19 Mar
பயிர்காப்பீடு திட்டத்திற்கு பட்ஜெட்டில் மாநில அரசின் பங்காக ரூ.2339 கோடி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர்
66 ஆயிரம் ஏக்கர் மாற்றுப்பயிருக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர்
10:21 AM, 19 Mar
7500 ஏக்கரில் இளைஞர்களுக்கு இயற்கை விவசாயம் செய்ய பயிற்சி அளிக்கப்படும் - வேளாண் அமைச்சர்
மாநில வேளாண் வளர்ச்சித்திட்டம் புதிதாக செயல்படுத்த ரூ. 71 கோடி ஒதுக்கீடு
10:24 AM, 19 Mar
46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது - வேளாண் அமைச்சர்
நெல் ஜெயராமன் பெயரில் 200 ஏக்கரில் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி - வேளாண் அமைச்சர்
10:26 AM, 19 Mar
சுய உதவிக்குழுவினர் ஆடு, மாடு, கோழி பண்ணை தொழில் தொடங்க மானியம் - வேளாண் அமைச்சர்
10:27 AM, 19 Mar
இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்க முதற்கட்டமாக 200 பேருக்கு தலா 1 லட்சம் நிதி உதவி - வேளாண்அமைச்சர்
பயிர் உற்பத்தியை அதிகரிக்க துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் அமைப்பு - வேளாண் அமைச்சர்
10:28 AM, 19 Mar
மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் சிறுதானிய திருவிழா நடத்தப்படும் - வேளாண் அமைச்சர்
கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலையில் துவரை உற்பத்தி மண்டலம் அமைக்கப்படும் - வேளாண் அமைச்சர்
10:30 AM, 19 Mar
சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை - வேளாண் அமைச்சர்
அந்த சூரியனை இந்த சூரியன் உற்பத்தி செய்யப்போகிறது - வேளாண் அமைச்சர்
10:34 AM, 19 Mar
தமிழன் தளம் என்ற புதிய இணைய தளம் மூலம் விவசாயிகளுக்கு தகவல் பரிமாற்றம் - வேளாண் அமைச்சர்
கடந்த ஆண்டு 3.35 லட்சம் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன - வேளாண் அமைச்சர்
வேளாண் மற்றும் விவசாயிகள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்பு குழு
விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க 7 உழவர் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும் - வேளாண் அமைச்சர்
10:35 AM, 19 Mar
வேளாண் துறையில் சிறந்த உற்பத்தியை தரும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் பரிசளிக்கப்படும் - வேளாண் அமைச்சர்
சோயபீன்ஸ் பயிரை அதிகரிக்க 1.20 கோடி செலவில் மத்திய அரசுடன் இணைந்து திட்டம் செயல்படுத்தப்படும் - வேளாண் அமைச்சர்
TN Agriculture Budget (தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்) 2022-23 LIVE Updates and Highlights in Tamil: Check the live news updates on Tamil Nadu Agricultural/Farm budget 2022-23 in Tamil. தமிழகத்தில் 2022-23 நிதியாண்டுக்காக தாக்கல் செய்யப்படும் வேளாண்/விவசாய துறைக்கான தனி பட்ஜெட் குறித்த நேரலை நேரலை செய்திகள் மற்றும் முக்கிய அம்சங்கள் பற்றி இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்கிறார்.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.