வேளாண் பட்ஜெட்: மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்.. எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி?
சென்னை: முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 10,000 விவசாயிகளுக்கு தலா 2 மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் கூறியுள்ளார். விளை நிலத்தின் செழிப்புக்கும் இயற்கை உரம் தயாரிக்கவும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2024-25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை சட்டசபையில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

2020-2021ம் ஆண்டில் 89 லட்சத்து 6000 ஏக்கராக இருந்த பாசனம் பெற்ற பயிர் பரப்பு, 2022-2023ஆம் ஆண்டில் 95 இலட்சத்து 39 ஆயிரம் ஏக்கராக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் சாகுபடி பரப்பளவு 2022 - 23-இல் 155 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்பட்டுள்ளது
2 லட்சம் விவசாயிகளுக்கு திரவ உயிர் உரங்கள் வழங்க ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு 5 லட்சம் லிட்டர் திரவ உயிர் உரங்கள் வழங்கப்படும்.
ஆடாதொடா, நொச்சி போன்ற தாவரங்களை தரிசு நிலங்களில் பயிரிட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு. உள்ளாட்சி கட்டுப்பாட்டில் உள்ள 4,773 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு; கன்னியாகுமரியில் தேன் பொருட்களுக்கு பரிசோதனை கூடம் அமைத்து பயிற்சி வழங்க ரூ.3.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு. வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு. பசுந்தாள் உரம் பயிரிட நிதி ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயிர்மை இடுபொருள் தயாரிப்பு மையம் 100 குழுக்களுக்கு ரூ. 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வேளாண் காடுகள் திட்டத்தில் மரக்கன்றுகள் உற்பத்தி மற்றும் நடவுக்கு ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு. சூரிய காந்தி சாகுபடியை 12,500 ஏக்கரில் விரிவாக்கும் திட்டத்திற்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications