சென்னை: நேற்று முதல் முறையாக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நேற்றைய பொது பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கப்பட்டது.தமிழகத்தை பொறுத்தவரை வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
அதன்படி இன்று இன்று காலை 9:30 மணி அளவில் தமிழக சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் வினோத் 2026-27 ம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் உரை வாசிப்பு 11.40 மணிக்கு நிறைவு பெற்றது. 2 மணிநேரம் 10 நிமிடங்கள் நடந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றன. அதுபற்றிய அப்டேட்டுகளை கீழே பார்க்கலாம்.
Aug 06, 2026, 11:41 am IST
பல்வேறு அறிவிப்புகளுடன் நிறைவு பெற்ற வேளாண் பட்ஜெட்
2026–27 ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் நிறைவு பெற்றது. காலை 9.30 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கிய வேளாண் துறை அமைச்சர் வினோத் காலை 11.39 மணிக்கு பட்ஜெட் உரையை நிறைவு செய்தார்.
Aug 06, 2026, 11:36 am IST
ரூ.17,000 கோடி பயிர் கடன் வழங்கப்படும்
2026–27 நிதி ஆண்டில் ரூ.17,000 கோடி பயிர் கடன் வழங்க முடிவு.
Aug 06, 2026, 11:33 am IST
500 பால்பண்ணைகள் அமைக்க 25 சதவீத மானியம் வழங்கப்படும்.
Aug 06, 2026, 11:33 am IST
200 மீன் குட்டைகள் அமைக்க மானியம் வழங்கப்படும்.
Aug 06, 2026, 11:33 am IST
வேளாண் துறை மூலம் 37.51 லட்சம் மரக்கன்றுகள் மாநிலம் முழுவதும் நடவு செய்யப்படும்.
Aug 06, 2026, 11:25 am IST
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களின் களப்பயிற்சிக்காக 6 புதிய பேருந்துகள் வாங்கப்படும். இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு.
Aug 06, 2026, 11:22 am IST
‘நம்மாழ்வர்’ பெயரில் ஒரு புதிய ‘உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்பு கல்லூரி
தஞ்சாவூர் மாவட்டம் சாக்கோட்டையில், ‘நம்மாழ்வர்’ பெயரில் ஒரு புதிய ‘உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்பு கல்லூரி’ ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Aug 06, 2026, 11:19 am IST
‘நஞ்சில்லா வேளாண் முறைகளை ஊக்குவித்து, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்க நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
Aug 06, 2026, 11:09 am IST
விவசாயிகளின் வருமான மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்படும்
‘விளைச்சலை தாண்டி வருமானமே இலக்கு’ என்ற அடிப்படையில் தமிழ்நாடு விவசாயிகளின் வருமான மேம்பாட்டு ஆணையத்திற்கு ரூ.5.20 கோடி ஒதுக்கீடு.
Aug 06, 2026, 11:08 am IST
ரூ.4 கோடியில் வேளாண் நுண்ணறிவு மற்றும் சந்தை மகத்துவ மையம் அமைக்கப்படும்.
Aug 06, 2026, 11:08 am IST
உழவர் சந்தை புனரமைப்பு பணிக்கு ரூ.22 கோடி ஒதுக்கீடு
Aug 06, 2026, 11:04 am IST
தஞ்சாவூரில் மாபெரும் வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி நடத்தப்படும்.
Aug 06, 2026, 11:04 am IST
விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் கதிரடிக்கும் களங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர ரூ.2.8 கோடி ஒதுக்கீடு.
Aug 06, 2026, 11:03 am IST
1000 விவசாயிகளுக்கு மானியத்தில் சூரிய பம்புசெட் வழங்கப்படும்.
Aug 06, 2026, 10:58 am IST
பொதுப்பிரிவு விவசாயிகள் போர்வெல் – கிணறு அமைக்க மானியம்
ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பை உருவாக்கிடும் வகையில் பொதுப்பிரிவை சேர்ந்த 500 விவசாயிகளுக்கு ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் பின்னேற்பு மானியத்தில் அமைத்து கொடுக்கப்படும்.
Aug 06, 2026, 10:57 am IST
100 சதவீத மானியத்தில் 500 பண்ணை குட்டைகள் உருவாக்கப்படும். அதேபோல் 75 சதவீத மானியத்தில் 500 பண்ணை குட்டைகள் தூர்வாரப்படும். இதற்காக ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கீடு.
Aug 06, 2026, 10:53 am IST
கிராம அளவிலான 50 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் 80 சதவீதம மானியத்தில் செயல்படுத்தப்படும். இதில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு 30 சதவீத ஒதுக்கீடு. இந்த திட்டத்திற்காக மொத்தம் ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு.
‘வெற்றி வான்மகள்‘ திட்டத்தின் கீழ் 100 மகளிர் உள்பட 500 நபர்களுக்கு ட்ரோன் இயக்க பயிற்சி உரிமம், 50 பயிற்சி பெற்ற மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வழங்கப்படும். இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு.
Aug 06, 2026, 10:49 am IST
‘விவசாயம் காக்க’ ‘வெற்றி வான்மகள்’ திட்டம் உருவாக்கப்படும்.
Aug 06, 2026, 10:45 am IST
24,000 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள்வழங்க ரூ.227.2 கோடி
மாநிலத்தில் 24 ஆயிரம் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வழங்க ரூ.227.2 கோடி நிதி ஒதுக்கீடு
Aug 06, 2026, 10:43 am IST
நீர் மேலாண்மைக்கான துளித் துளித் தண்ணீர் திட்டம் செயல்படுத்தப்படும். குறைந்த நீரில அதிக மகசூல் பெறும் வகையில் இந்த திட்டம் 95 ஆயிரம் விவசாயிகளின் 2.2 லட்சம் ஏக்கர் நிலத்தில் கொண்டு வரப்படும்.
Aug 06, 2026, 10:42 am IST
57,000 மெட்ரிக் டன் அளவிலான வெங்காய சேமிப்பு கிடங்குகள் அமைக்க ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு.
Aug 06, 2026, 10:37 am IST
தென்னை சார்ந்த பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க செய்ய தமிழ்நாட தென்னை பதப்படுத்தும் கழகத்திற்கு ரூ.5.30 கோடி நிதி ஒதுக்கீடு.
Aug 06, 2026, 10:37 am IST
தென்னை சிறப்பு திட்டத்திற்காக ரூ.41 கோடி ஒதுக்கீடு
Aug 06, 2026, 10:36 am IST
நன்னெறி சாகுபடி; நஞ்சற்ற உற்பத்தி மற்றும் உலகளாவிய ஏற்றுமதிக்காக ரூ.8.43 கோடி ஒதுக்கீடு.
Aug 06, 2026, 10:33 am IST
தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை உயர்த்த உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகளுக்கு ரூ.41 கோடி ஒதுக்கீடு. அதன்படி சாமந்தி சாகுபடியை ஒளியூட்டி ஊக்குவித்தல், பழ உறைகள், குலை உறைகள், பசுமைக்குடில், நிழல்வலை குடில், நிரந்தர பந்தல் அமைத்தல், வாழை விழாமல் இருக்க முட்டு கொடுத்தல் உள்ளிட்டவை வழங்கி விவசாயிகளுக்கு உதவி செய்யப்படும்.
Aug 06, 2026, 10:32 am IST
தமிழ்நாடு தளிர் கீரைகள் திட்டத்திற்கு ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு.
Aug 06, 2026, 10:29 am IST
‘வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்டம்’ திட்டத்திற்கு ரூ.10 கோடி
‘வெற்றி இல்லதரசி வீட்டு தோட்டம்’ திட்டத்தில் மாடித்தோட்டம் அமைக்க இடுபொருள் தொகுப்புகள், காய்கறி விதை தொகுப்புகள், பழச்செடி தொகுப்புகள், நீரியல் தோட்டம், செங்குத்து தோட்டம், நிழல்வலை குடிக்கள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Aug 06, 2026, 10:27 am IST
பனைவிதைகள்,பனங்கன்றுகள் விநியோகம், பயிற்சி அளித்தல் மற்றும் பனை பொருள் உற்பத்தி கூடாரங்கள் அமைப்பதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
Aug 06, 2026, 10:27 am IST
17,315 ஏக்கருக்கு விதைக்கரும்பு மானியம் வழங்க ரூ.9.36 கோடி நிதி ஒதுக்கீடு.
READ MORE
8:52 AM, 6 Aug
2026–27 ம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டை தமிழக வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்ய உள்ளார்.
8:53 AM, 6 Aug
தவெக தலைவர் விஜய் முதல்வரான பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் வேளாண் பட்ஜெட் என்பதால் விவசாயிகள் அதிக எதிர்பார்ப்பு.
8:53 AM, 6 Aug
வேளாண் கடன் தள்ளுபடி தொடர்பான கூடுதல் அறிவிப்பு வெளியாகுமா? என்பதை எதிர்நோக்கி உள்ளனர் விவசாயிகள்.
8:54 AM, 6 Aug
நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 3,500 ஆகவும், கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ. 5,000 ஆகவும் உயர்த்தி வழங்குவது தொடர்பாக அறிவிப்புகள் வருமா? என விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
8:55 AM, 6 Aug
வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து தமிழக சட்டசபைக்கு புறப்பட்டார் முதல்வர் விஜய்.
9:10 AM, 6 Aug
வேளாண் பட்ஜெட்டையொட்டி பிரதான எதிர்க்கட்சியான திமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர். காவிரி விவகாரம், மேகதாது அணை எதிர்ப்பு, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்டவற்றை தவெக அரசு சரியாக கையாளவில்லை என்று குற்றம்சாட்டி திமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை தந்துள்ளனர். இன்றைய தினம் காவிரி விவகாரம், மேகதாது அணை எதிர்ப்பு, விவசாய கடன் தள்ளுபடி தொடர்பான விவகாரங்களை சட்டசபையில் எழுப்ப திமுகவினர் திட்டம் எனவும் தகவல்.
9:14 AM, 6 Aug
வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அமைச்சர் வினோத்திற்கு துறை சார்ந்த அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து.
9:24 AM, 6 Aug
சற்று நேரத்தில் 2026–27 ம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டை காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்கிறார் வேளாண் துறை அமைச்சர் வினோத்.
9:33 AM, 6 Aug
தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வனோத் தாக்கல் செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
9:38 AM, 6 Aug
முதல்வர் விஜய்யை புகழ்ந்து பேசிய வேளாண் அமைச்சர் வினோத்திற்கு எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு. எதிர்க்கட்சியினரின் அமளியை தொடர்ந்து பட்ஜெட்டை உரையை படிக்கும்படி சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.
9:44 AM, 6 Aug
திருக்குறளுடன் வேளாண் பட்ஜெட்
‘‘உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து’’ எனும் திருக்குறளுடன் விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
9:45 AM, 6 Aug
விவசாயிகள் கருத்துகளை கேட்டு வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. விளைபொருட்களுக்கு உரிய விலை கொடுக்க நடவடிக்கை – அமைச்சர் வினோத்.
9:47 AM, 6 Aug
விவசாயிகளுக்கான முன்னோடி திட்டங்களுடன் நிதி நிலை அறிக்கை தயாரிப்பு – அமைச்சர் வினோத்
9:48 AM, 6 Aug
முதல்வர் வகுத்து கொடுத்த சீரிய தொலைநோக்கு திட்டங்களுடன் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ள வேளாண் திட்டங்கள் தொடர்வதோடு,புதிய திட்டங்கள் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் – அமைச்சர் வினோத்.
9:49 AM, 6 Aug
எல் நினோவால் 12 மாவட்டங்களில் அதிக பாதிப்பு என பட்ஜெட்டில் தகவல்
9:53 AM, 6 Aug
விவசாயிகளுக்கான மும்முனை இலவச மின்சாரம் தொடரும்.விவசாயிகளின் மும்முனை மின்சார திட்டத்துக்கு ரூ.7,432 கோடி மின்வாரியத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. – வேளாண் பட்ஜெட்
9:54 AM, 6 Aug
தமிழ்நாடு மண்வளம் பாதுகாப்பு இயக்கம் அறிமுகம் செய்யப்படும்.
9:55 AM, 6 Aug
உழவர் ஐடி பெற்ற 3 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6 கோடியில் மண்வள அட்டை வழங்கப்படும்.
10:02 AM, 6 Aug
புதிய இயற்கை வேளாண் தொகுப்பை உருவாக்க ரூ.9 கோடி ஒதுக்கீடு.
10:02 AM, 6 Aug
நெல் விதை உற்பத்தி, விநியோக மானியத்துக்காக மாநில அரசின் சிறப்பு திட்டத்துக்கு ரூ34.72 கோடி நிதி ஒதுக்கீடு.
10:02 AM, 6 Aug
2026–27 ம் ஆண்டில் 131 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு.
10:07 AM, 6 Aug
மண்வள பாதுகாப்பு இயக்கத்துக்கு ரூ.122.51 கோடி நிதி ஒதுக்கீடு.
10:07 AM, 6 Aug
உழவர் ஏஐ திட்டம் செயல்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு
10:07 AM, 6 Aug
சாமை, திணை, வரகு உள்ளிட்டவற்றிற்காக தமிழ்நாடு குறுதானிய இயக்கம் தொடங்கப்படும். இதற்காக ரூ.7.61 கோடி நிதி ஒதுக்கீடு.
10:10 AM, 6 Aug
மக்காச்சோளத்தின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு.
10:10 AM, 6 Aug
பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கத்திற்காக ரூ.203.64 கோடி நிதி ஒதுக்கீடு.
10:10 AM, 6 Aug
பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்திற்காக ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு.
10:13 AM, 6 Aug
ஆதிதிராவிடர் – பழங்குடியினருக்கு 20 சதவீதம் கூடுதல் மானியம்
அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவி திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த சிறு, குறு விவசாயிகள், உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் 20 சதவீதம் வரை கூடுதல் மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மின்மோட்டார் சூரிய சக்தி பம்புசெட்டுகள் 300 ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக ரூ.56.72 கோடி நிதி ஒதுக்கீடு.
10:17 AM, 6 Aug
காட்டுபன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளை தடுக்க காட்டுப்பன்றி சேத தடுப்பு திட்டத்திற்கு ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடு.
10:17 AM, 6 Aug
விவசாய நிலங்களில் நிரந்தர பசுமைக்கு வேளாண் காடுகள் திட்டத்திற்காக ரூ.17.70 கோடி நிதி ஒதுக்கீடு.
TN Agri Budget 2026 LIVE News in Tamil: Follow Tamil Nadu Agriculture Budget 2026 LIVE updates, key announcements, new farmer welfare schemes, agriculture allocations, subsidies, irrigation projects, and budget highlights.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.