தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக்கி சாகுபடி பரப்பு உயர்த்தப்படும்.. வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக்கி சாகுபடி பரப்பை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், வேளாண் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். பொது பட்ஜெட்டைப் போலவே வேளாண் பட்ஜெட்டும் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

வேளாண் துறை பட்ஜெட்

வேளாண் துறை பட்ஜெட்

வேளாண் துறைக்கான பட்ஜெட் வாசிக்க தொடங்கியது முதலே பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் தொடங்கப்படுகிறது. இதேபோல் இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோர் ஆக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இயற்கை வேளாண்மைக்கு தனிப்பிரிவு

இயற்கை வேளாண்மைக்கு தனிப்பிரிவு

வேளாண்மைத்துறையில் இயற்கை வேளாண்மைக்கென தனிப்பிரிவு உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு விதைப்பண்ணைகள் மூலம் ரூ.25 லட்சம் செலவில் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி மையம் அமைக்கப்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தரிசு நிலங்கள் கண்டுபிடிப்பு

தரிசு நிலங்கள் கண்டுபிடிப்பு

தமிழ்நாட்டில் 19.31 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக்கி சாகுபடி பரப்பை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசன முறைகள் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பனை வெல்லம்

பனை வெல்லம்

பனை வெல்லத்தை ரேசன் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பனை மேம்பாடு இயக்கம் தொடக்கம் என்றும் வேளாண் துறை அமைச்சர் கூறியுள்ளார். பனை மரத்தை வெட்டும்போடு ஆட்சியரின் அனுமதி பெறுவது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் பனை மரத்தை வெட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+