அரை ஆந்திராவான திருவண்ணாமலை.. தமிழக - ஆந்திர பக்தர்களிடையே மோதல்! குடுமிப்பிடி சண்டையால் பரபரப்பு!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் குறுக்கு வழியில் பக்தர்கள் செல்ல முயற்சித்ததால் தமிழக -ஆந்திர பக்தர்களிடையே மோதல் ஏற்பட்டது. வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து தாக்கிக் கொண்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அனுதினமும் வெளிமாவட்டம் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவல பாதையில் கிரிவலம் செல்லவும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வருகின்றனர்.
வழக்கத்தை விட பொங்கல் தினத்தையொட்டி அண்ணாமலையார் திருக்கோவிலுக்குள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் ராஜகோபுரம் வழியே நீண்ட வரிசையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆயிரம் கால் மண்டபம் அருகே பக்தர்கள் வரிசையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, ஆந்திர பக்தர்கள் வரிசையில் குறுக்கே சென்று சாமி தரிசனம் செய்ய முயற்சித்துள்ளனர். இதனால் வரிசையில் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் ஆந்திர பக்தர்களைக் கொண்டே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. ஒருவரை ஒருவர் தலை முடியை பிடித்து அடித்து சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இந்த நிகழ்வு அண்ணாமலையார் கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஒரு புறம் இருக்க கோவில் சார்பில் போடப்பட்டிருந்த இரும்பு தடுப்பு வேலிகளை தாண்டியும் பக்தர்கள் குதித்து சாமி தரிசனம் செய்ய முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருக்கோவிலுக்குள் மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் இரண்டு காவலர்கள் மட்டும் இருந்ததால் அவர்களால் ஒருவரை ஒருவர் தடுக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.மாவட்ட நிர்வாகம் விசேஷ நாட்களில் போதுமான காவலர்களை ஆங்காங்கே திருக்கோவிலுக்குள் நியமித்து வரிசைகளை கட்டுப்படுத்துவதுடன் இதுபோன்று அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது ஆன்மீக பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் குறுக்கு வழியில் பக்தர்கள் செல்ல முயற்சித்ததால் தமிழக ஆந்திர பக்தர்களிடையே மோதல்...#Thiruvannamalai #Devotees #ViralWatch #Oneindia #OITamil pic.twitter.com/sDA4JB93uR
— Oneindia Tamil (@thatsTamil) January 17, 2026
பொங்கல் தினத்தன்று அண்ணாமலையார் திருக்கோவிலுக்குள் பக்தர்கள் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications