வருட சம்பளம் 2.5 லட்சத்திற்கு குறைவா இருக்கணும்! விஜய்யின் அண்ணன் சீர் பெறுவது ஏன் கடினம் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு உதவும் வகையில், தமிழக அரசு 'அண்ணன் சீர்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இதில் பயன் பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மணப்பெண்களுக்கு 8 கிராம் கொண்ட 22 காரட் தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் திருமணப் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2026-27 நிதியாண்டில் 812 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டு, திட்டத்திற்கான முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை தற்போது வெளியிட்டுள்ளது.

tvk vijay

அண்ணன் சீர் திட்டம்

ஆனால், அரசு வெளியிட்டுள்ள இந்தப் புதிய விதிமுறைகளைப் பார்க்கும்போது, அண்ணன் சீர் திட்டத்தில் 8 கிராம் தங்கமும் பட்டுப்புடவையும் வாங்குவது அவ்வளவு எளிதல்ல என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது. அதற்குக் காரணம், இத்திட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளும்தான்.

முதலில், தேர்தல் வாக்குறுதியில் குடும்ப ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய் வரை உள்ளவர்களுக்கு இத்திட்டம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள அரசாணையில், மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் எனக் குறைக்கப்பட்டுள்ளது. மாதத்திற்குச் சராசரியாக 20,800 ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் எந்தவொரு குடும்பமும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கவே முடியாது?

வருமான வரம்பு மட்டுமின்றி, கீழ்க்காணும் பட்டியலில் உள்ள யாருக்கும் அண்ணன் சீர் கிடைக்காது என அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது:

சொந்தப் பயன்பாட்டிற்கு கார் வைத்திருக்கும் குடும்பங்கள். வருமான வரி அல்லது தொழில் வரி செலுத்தும் குடும்பங்கள். 5 ஏக்கருக்கு மேல் நன்செய் நிலமோ அல்லது 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலமோ வைத்திருப்பவர்கள்.

வீட்டில் ஆண்டுக்கு 3,600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்கள். அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் குடும்பங்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தவிர மற்ற மக்கள் பிரதிநிதிகளின் குடும்பங்கள். ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்து ஜி.எஸ்.டி செலுத்தும் வியாபாரிகளின் குடும்பங்கள். ஏற்கனவே வேறு ஏதேனும் அரசுத் துறை அல்லது நலவாரியத் திருமண உதவித் திட்டத்தில் பயன்பெற்றவர்கள்.

ஆவணச் சரிபார்ப்பும் 15 நாள் கெடுவும்

மேற்கண்ட தடைகளைத் தாண்டி தகுதி பெற்றாலும், விண்ணப்ப நடைமுறையிலும் சில முக்கிய நிபந்தனைகள் உள்ளன. மணப்பெண் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும், திருமணமும் தமிழ்நாட்டில்தான் நடைபெற வேண்டும். மணமக்கள் இருவரும் சட்டப்பூர்வ திருமண வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.

குறிப்பாக, அரசின் ரேஷன் கார்டில் மணப்பெண்ணின் பெயர் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். திருமணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்தே திருமண நாள் வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். (கடந்த அக்டோபர் 5, 2026 முதல் வரும் ஜனவரி 15, 2027 வரை திருமணம் நடைபெறுபவர்களுக்கு மட்டும் ஜனவரி 15 வரை சிறப்பு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது).

தகுதியுள்ளவர்கள் அருகிலுள்ள அரசு இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ ஆதார் எண், ரேஷன் கார்டு எண் மற்றும் திருமண அழைப்பிதழைப் பதிவேற்றி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் ஏற்கப்பட்டதும் தனித்துவ அடையாள எண் வழங்கப்பட்டு, அதன் ஸ்டேட்டஸ் குறித்து எஸ்.எம்.எஸ், வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்படும்.

திட்டத்தின் பலனைப் பெறுபவர்கள், திருமணம் முடிந்த 15 நாட்களுக்குள் தங்களது திருமணத்தைத் தமிழ்நாட்டில் முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவேளை தகுதியில்லை என விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணம் தெரிவிக்கப்படும்.. அதன் மீது விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உண்மையான ஏழைக் குடும்பங்களுக்கு மட்டுமே இந்த உதவி சென்றடைய வேண்டும் என்பதற்காகவே அரசு இத்தனை விதிமுறைகளை வைத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+