மாணவ, மாணவிகளே ரெடியா? 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு!
சென்னை: தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பொது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2026 - 2027ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை நாளை வெளியிடப்பட உள்ளது. சென்னை பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் 2027ஆம் ஆண்டு பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட உள்ளார்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தின் கீழ் 10, 12 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுதுகின்றனர்.

பத்தாம் வகுப்பிலிருந்து பதினோராம் வகுப்பு செல்வதற்கும், 12 ஆம் வகுப்பிலிருந்து உயிர் கல்வி பயில்வதற்கும் பொது தேர்வு முடிவுகளெ அடிப்படையாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் ஏப்ரல் வரையிலான கால கட்டத்தில் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2026 - 2027 ஆம் கல்வியாண்டில் படித்து வரும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களுடியே நிலவி வந்தது. இந்த நிலையில் 2027 ஆம் ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை நாளை வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இந்த அட்டவணையை நாளை வெளியிட உள்ளார். அட்டவணை வெளியானதும் ஒவ்வொரு வகுப்புக்குமான தேர்வு தொடங்கும் நாள், நிறைவடையும் நாள் உள்ளிட்ட விபரங்கள் மாணவர்களை தெரிவிக்கப்படும். மேலும் செய்முறை தேர்வுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளடுஹ்.
தேர்வு அட்டவணை வெளியான பின்னர் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் மாணவர்களை அதனை தெரிந்து கொள்ளலாம். மேலும் பள்ளிகளுக்கும் இந்த தேர்வு வட்டாரவனை அனுப்பி வைக்கப்பட உள்ளது.
கடந்த கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி வரை நடைபெற்றன. அதேபோல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடத்தப்பட்டன.
இந்த நிலையில், 2027ம் ஆண்டு பொதுத்தேர்வுகள் எந்த தேதியில் தொடங்கும், தேர்வுகளுக்கு இடையே மாணவர்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாட்கள் எத்தனை, செய்முறைத் தேர்வுகள் எப்போது நடைபெறும் போன்ற விவரங்கள் நாளை வெளியாகும் தேர்வு அட்டவணையில் தெரியவரும் என்பதால் மாணவர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.




Click it and Unblock the Notifications
