PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! ‘இதை’ செய்யலைனா காலி! தமிழக அரசின் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வருகின்ற 29.08.2026 அன்று eKYC சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அனைத்து பயனாளிகளின் கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கும் நிலையில் தற்போது தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒருவேளை இதனை சரி பார்க்காவிட்டால் பெயர்கள் நீக்கப்படும் அபாயம் இருப்பதாக சொல்கின்றனர் அதிகாரிகள்.

தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கூட்டுறவுத் துறை மற்றும் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறையின் கீழ் ரேஷன் கடைகள் இயக்கப்பட்டு வருகிறது, இதன் மூலம் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.

Ration Card KYC chennai

தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட 38 மாவட்டங்களில் 34 ஆயிரத்து 792 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 33,000 கடைகள் நேரடியாக கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படுகிறது. மத்திய தொகுப்பு மூலமும், மாநில அரசு மூலமும் மக்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.

ரேஷன் கடை

ஒரு பகுதியில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள பகுதிகளில் 18,782 முழு நேர ரேஷன் கடைகளும், பகுதி நேரமாக 9388 ரேஷன் கடைகளும் இயங்கி வருகின்றன. ஆயிரத்திற்கு மேல் குடும்ப அட்டைகள் கொண்ட பகுதிகளில் முழு நேரமாக 4,352 ரேஷன் கடைகளும் செயல்படுகின்றன. இதன் மூலம் தமிழக முழுவதும் 2 கோடியே 23 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

குடும்ப அட்டை

இதன் மூலம் சுமார் 7 கோடி பயனாளிகள் பயன் பெருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த சில தினங்களாக புதிய ரேஷன் கார்டுகள் பெறுவதற்காக பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் ஆகியோரது பெயர்கள் மூலம் உணவுப் பொருட்கள் இன்னும் சிலர் வாங்கி வருவதாக சொல்லப்படுகிறது. இதை எடுத்து அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் இகேஒய்சி எனப்படும் கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

இகேஒய்சி

2 முறை தேதி நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது இம்மாத இறுதிக்குள் அனைவரும் இகேஒய்சி சரி பார்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதை அடுத்து தமிழகத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரி பார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் கை ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

eKYC பணி

அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.21% eKYC பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த eKYC பதிவினை 100% நிறைவு செய்யும்பொருட்டு 29.08.2026 அன்று தமிழகத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை நடைபெறவுள்ளது.

ஆகஸ்ட் 29

எனவே, இன்று வரை, நியாயவிலைக் கடைகள் மூலம் கை ரேகைப் பதிவு (eKYC) செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் வருகின்ற 29.08.2026 அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது கை ரேகைப் பதிவினை (eKYC பதிவினை) மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+