1 முதல் 12 வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு.. காலாண்டு தேர்வு எப்போது? தேதியை அறிவித்த அன்பில் மகேஷ்!
சென்னை: அக்டோபர் மாதம் 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அதேபோல் 1 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு செப்.18ல் தொடங்கி செப்.26ஆம் தேதி வரையும் நடக்கவுள்ளது. அதன்பின் செப்.27 முதல் காலாண்டு தேர்வு விடுமுறை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஜூன் மாதம் முதல் அரசுப் பள்ளிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நடப்பாண்டில் மட்டும் சுமார் 3.8 லட்சம் மாணவர்கள் கூடுதலாக அரசுப் பள்ளியில் இணைந்துள்ளனர். 2 மாதங்களாக வகுப்புகள் நடந்து வரும் நிலையில், மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும் அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு என்று 3 பருவத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 1 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்.18ஆம் தேதி முதல் செப்.26ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இதன்பின் செப்.27 முதல் காலாண்டுத் தேர்வுக்கான விடுமுறை தொடங்க உள்ளது.
அதேபோல் அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 15 முதல் டிசம்பர் 23 வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 24 முதல் அரையாண்டு விடுமுறை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், முதல்வர் ஸ்டாலினின் ஆலோசனையின்படி கடந்தாண்டு போலவே 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும். இத்துடன் பள்ளிக் கல்வித்துறையின் நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் அடங்கிய பக்கங்களை இணைத்துள்ளோம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆலோசனையின்படி, கடந்தாண்டு போலவே 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) July 29, 2025
இத்துடன் பள்ளிக் கல்வித்துறையின்(2025-2026) நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு/அரையாண்டுத்… pic.twitter.com/9D0uV89OGk
மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தன்னம்பிக்கையோடு தயார் ஆகுங்கள் என்று பதிவிட்டுள்ளார். காலாண்டு தேர்வுக்கு இன்னும் சுமார் ஒன்றரை மாதங்கள் இருப்பதால், மாணவர்கள் தயாராகுவதற்குச் சரியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை கடந்த ஆண்டை போலவே அக்டோபரில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications